ஸ்பெஷல்

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

கல்கி

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

-இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில்  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை.

-இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் 95.44% தேர்ச்சி பெற்று விருதுநகர் 2-வது இடமும், 95.25% தேர்ச்சி பெற்று மதுரை 3-வது இடமும் பிடித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

SCROLL FOR NEXT