ஸ்பெஷல்

விராட் கோலிக்கு மனைவியால் கெட்ட நேரம்; பாலிவுட் நடிகரின் சர்ச்சை கருத்து!

கல்கி

விராட் கோலியின் வாழ்க்கையில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா  என பாலிவுட் நடிகர் கேஆர்கே விமரிசித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் பெரிதாக சாதிக்கவில்லை. இதுவரை அவர் விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி. இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகுதான் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் கேஆர்கே தன் ட்விட்டர் பதிவில் வெளியிட்டதாவது;

விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இதனால் அனுஷ்காவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும். அவரை திருமணம் செய்த பிறகுதான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் கேஆர்கே அந்த ட்விட்டை நீக்கி விட்டார்.

பாலிவுட் நடிகர் கேஆர்கே அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதும், அதற்காக அவரது சமூக வலைத்தளப் பக்கங்கள் பலமுறை முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT