ஸ்பெஷல்

கிழிந்த ரூபாயை எந்த வங்கியிலும் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கல்கி

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளீயிட்டுள்ள அறிக்க:

பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்தால், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை அருகிலுள்ள எந்த வங்கிக் கிளியிலும் சென்றூ மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதமே ரிசர்வ் வங்கி வெளியிட்டாலும் கூட, கொரோனா கால நடைமுறையால் அது பின்பற்றப்படாமல் இருந்தது. இப்போது அந்த அறிவிப்பை அமலுக்கு கொண்டு வர அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாடு முழுவதும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்லப்பட்டு, அதனால் பலகோடி ரூபாய் வீணாவதாக எழுந்த புகாரையடுத்து இந்த புதிய நடைமுறை கொண்டு வரப் பட்டுள்ளது.

“பிரமிப்பூட்டும் கன்ஹேரி குகைகள்” எங்கே இருக்குத் தெரியுமா?

நெஞ்சை உருக்கும் இனிய குரலில் காதலர்களை ஈர்த்த கானம்! 'பூங்கதவே தாள் திறவாய்' புகழ் பாடகி உமா ரமணன் மறைவு: அஞ்சலி!  

முடி வளர்ச்சிக்கு உதவும் வால்நட் ஷெல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

சின்னத்திரையில் வடிவேலு: சம்பளம் 1 கோடியாம்மே!

கோடையில் சூப்பராக ட்ரிப் அடிக்க 10 ஸ்பாட்கள்!

SCROLL FOR NEXT