ஸ்பெஷல்

மத்திய தரைக் கடலுக்குள் விழுந்தது பிரிட்டன் போர் விமானம்: மீட்புப் பணிகள் தீவிரம்!

கல்கி

பிரிட்டன் போர்க்கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எஃப்-35 போர் விமானம் விபத்துக்குள்ளாகி மத்தியதரைக் கடல் பகுதியில் கடலில் விழுந்தது. அதன் விமானி பாராசூட் மூலம் குதித்துத் தப்பினார். விமானத்தை மீட்கும் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரிட்டனில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளுக்காக எச்எம்எஸ் குயீன் எலிசபெத் என்ற விமானம் தாங்கிக் கப்பல் மத்திய தரைக் கடல் பகுதிக்குச் சென்றது. அக்கப்பலிலிருந்து ஏவப்பட்ட எஃப்-35 ரக விமானம், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT