World Hello Day 
ஸ்பெஷல்

உலக ஹலோ தினத்தின் சிறப்புகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

லக ஹலோ தினம் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. மக்களிடையே அமைதி மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

உலக ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் முக்கியக் காரணங்கள்:

தகவல் தொடர்பு மேம்பாடு: பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாசாரங்களை சேர்ந்த மக்களிடையே உறவுகளை வளர்ப்பதிலும் புரிதலை வளர்ப்பதிலும் கருவியாக விளங்கும் தகவல் தொடர்புகளின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.

அமைதியான தொடர்புகளை ஊக்குவித்தல்: 1973ம் ஆண்டு எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு விடை தரும் வகையில் உலக ஹலோ தினம் தொடங்கப்பட்டது. எளிமையான வாழ்த்துக்களில் உரையாடலை தொடங்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் உத்தேசித்து இந்த நாள் தொடங்கப்பட்டது. அதன் மூலம் மிகவும் அமைதியான உலகத்திற்கு வித்திட முடியும் என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது.

உலகளாவிய பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வு: ஒருவர் குறைந்தது 10 பேரையாவது வாழ்த்துமாறு ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய மோதல்கள் மற்றும் வன்முறையை குறைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் எழுப்புகிறது.

சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துதல்: இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் சமூகங்கள் ஒன்று சேரவும் உறவுகளை வலுப்படுத்தவும் அண்டை மற்றும் அந்நியர்களிடையே கருணை மற்றும் பச்சாதாபத்தை ஊக்குவிக்கவும் வழி வகுக்கிறது.

பண்பாட்டுப் பரிமாற்றம்: இது மொழிகள் மற்றும் கலாசாரங்களின் பன்முகத்தன்மையை கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஏனென்றால் மக்கள் பல்வேறு மொழிகளில் மற்றவர்களை வாழ்த்த ஊக்குவிக்கப்படுகிறனர். ஒட்டுமொத்தமாக உலக ஹலோ தினம் உலகம் முழுவதும் அமைதி மற்றும் புரிதலை மேம்படுத்துவதிலும் கருணை மற்றும் இணைப்பின் எளிய சைகைகள் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கத்தை நினைவூட்டுகிறது.

இந்த நாளில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?

பிறரை வாழ்த்துங்கள்: நாள் முழுவதும் குறைந்தது 10 பேரிடமாவது ஹலோ சொல்ல முயற்சி செய்யுங்கள். இதில் நண்பர்கள் குடும்பத்தினர் சக பணியாளர்கள் மட்டுமல்லாமல், பெயர் தெரியாத அந்நியர்களைக் கூட வாழ்த்தலாம். வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தவும்; வெவ்வேறு மொழிகளில் மக்களை வாழ்த்துவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் கலாசாரங்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தலாம். புதிய சொற்றொடரை கற்றுக் கொள்வதற்கும் புதிய மொழி திறன்களைப் பயிற்சி செய்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

சந்திப்பு: நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சிறிய சந்திப்பை ஏற்பாடு செய்யலாம். இதில் கருப்பொருளாக வாழ்த்துக்கள் மற்றும் ஹலோ செய்திகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்த்துக்கள் பற்றிய கதைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

கருணையை பரப்புதல்: பிறரிடம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது கருணையோடு பகிர வேண்டும். மலர்ந்த புன்னகை முகத்துடன் ஒரு பாராட்டோ அல்லது வாழ்த்துக்களையோ தெரிவிக்கும்போது அது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பிறரை உற்சாகப்படுத்தும் விதத்திலும் இருக்கும்.

விழிப்புணர்வு: சமூக ஊடகங்களில் இந்த நாளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இது தொடர்பான சமூக நிகழ்வுகள் அல்லது தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இது சமூகத்தில் இணைப்புகளை உருவாக்கி நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும். வெவ்வேறு கலாசாரங்களில் உள்ள வாழ்த்துகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வகுப்பு செயல்பாட்டை ஆசிரியர்கள் ஏற்படுத்தலாம்.

உறவுகளின் முக்கியத்துவம்: நமது வாழ்க்கையில் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கலாம். பிறரிடம் வாழ்த்துக்களை தெரிவிப்பதன் மூலம் தொடர்புகள் எவ்வாறு நீடிக்கின்றன என்பதை பற்றி ஒரு கட்டுரையாக எழுதி குடும்பத்தினர் அதை வாசித்துக் காட்டலாம்.

மொத்தத்தில் எளிமையான வாழ்த்துகள் மூலம் உறவுகளை மேம்படுத்தவும் புரிதலை ஊக்குவிக்கவும் அமைதியான உலகத்திற்கு பங்களிக்கவும் முடியும்.

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT