ஸ்பெஷல்

தை அமாவாசை: தாமிரபரணியில் முன்னோர் வழிபாடு!

கல்கி

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றின் கரையில் இன்று அதிகாலையில் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்

தைஅமாவாசையன்று இந்துக்கள் தங்கள் மூதாதையர்களை நினைவு கூர்ந்து புண்ணியத்தலங்களில் உள்ளநீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.இப்போது கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தை அமாவாசையான இன்று தாமிரபரணி ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்தக்கட்டங்களில் மக்கள் தர்ப்பணம் கொடுக்க, நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இதைஅய்டுத்து இன்று தாமிரபரணி ஆற்றின்கரைகளில் அதிகாலை முதலே பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்துவருகின்றனர். இதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

சம்மருக்கு சுவையான சிம்பிள் மில்க் ரெசிபிஸ் இதோ...

A - Z நகை பாதுகாப்பு...!

சுயபுத்தி போனாலும், சொல்புத்தி வேண்டும்!

கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!

SCROLL FOR NEXT