ஸ்பெஷல்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது: தலைமைச் செயலர் அறிக்கை!

கல்கி

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தமிழக அரசுத் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்நிலையில் இதுதொடர்பான விரிவான அறிக்கையை தலைமை செயலாளர் இறையன்பு இன்று தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டதாவது:

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்  நீர்வள ஆதாரங்களைப் பெருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் குடிநீர் மற்றும் விவசாயம், மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும்; நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதி மன்றமும் உயர்நீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. மேலும் இதுதொடர்பாக கடந்த 2020ம் ஆண்டே தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

SCROLL FOR NEXT