ஸ்பெஷல்

திருப்பதி தனி மாவட்டமாக அறிவிப்பு; ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என புதிய பெயர்!

கல்கி

திருப்பதி தனி மாவட்டமாக அறிவிப்பு; ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என புதிய பெயர்!

திருப்பதியை தனி மாவட்டமாக அறிவித்து அதற்கு ஶ்ரீபாலாஜி மாவட்டம் என் பெயர்சூட்டி ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர அரசு கெஜட்டில் வெளியான தகவல்;

ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை மக்களவைத் தொகுதிகளின் அடிப் படையில் 26 மாவட்டங்களாக உருவாக்க ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி தனியாகப் பிரிக்கப்பட்டு அதற்கு ஸ்ரீபாலாஜி மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சந்திரகிரி, ஸ்ரீகாளஹஸ்தி, வெங்கடகிரி, சூளுர் பேட்டை, நாயுடு பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற உள்ளன.

இந்த புதிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, உகாதி பண்டிகை முதல் திருப்பதி உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் செயல்படத் தொடங்கும்.

-இவ்வாறு ஆந்திர அரசு அறிவித்துள்ளது

அழகோடு ஆரோக்கியம் காக்கும் செம்பரத்தம் பூ!

Sea of Milk – Dushsagar Falls!

அக்னி நட்சத்திர காலத்தில் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?

முழங்கால் மூட்டு வலிக்கு காரணமும் உடனடி எளிய தீர்வும்!

ஆசியாவிலேயே உயரமான ஸ்தூபி, 130 அடி உயர புத்தரின் சிலை உள்ள மைண்ட்ரோலிங் மடாலயம்!

SCROLL FOR NEXT