மூன்றாம் உலகப்போர்… இந்த வார்த்தையைக் கேட்டாலே நம் உடல் நடுங்கும். இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் இன்றளவும் நமது நினைவில் இருக்கையில், மீண்டும் அப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்தால் என்ன ஆகும் என யோசிக்காமல் நம்மால் இருக்க முடியாது. ஒருவேளை மூன்றாம் உலகப்போர் நாளை நடந்தால் என்ன ஆகும் என்பதற்கான ஒரு கற்பனை கண்ணோட்டத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
கற்பனைக் கதை: திடீரென கிழக்கு ஐரோப்பாவில் எல்லை மோதல் பெரிய போராக மாறுகிறது. NATO படைகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் அதிகரிக்கிறது. சில மணி நேரங்களில் அமெரிக்க, சீனா மற்றும் பிற முக்கிய நாடுகலும் போரில் இணைக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்து, அணு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தல் மக்களை பயமுறுத்துகிறது. எல்லா நாடுகளும் தங்களது சொந்த அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளனர். அப்படியே மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மூன்றாம் உலகப் போரினால் ஏற்படும் விளைவுகள்:
மூன்றாம் உலகப் போர் சந்தேகத்திற்கு இடமின்றி நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பேரழிவை ஏற்படுத்தும். மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல் போன்றவை பேரழிவை சந்திக்கும்.
உலக பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்திக்கும். வர்த்தகங்கள் மொத்தமாக சீர்குலைந்து பல தொழில்கள் அழிந்துவிடும். இந்த வீழ்ச்சியிலிருந்து மீள முடியாமல் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும்.
மூன்றாம் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவு பல சகாப்தங்களாக ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை பின்னுக்கு தள்ளும். அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் மேம்பாடு போன்றவை முற்றிலும் சிதைந்து அவை மீண்டும் அதே நிலையை அடைய பல தலைமுறைகள் ஆகலாம்.
மூன்றாம் உலகப் போரினால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும். அணு ஆயுதங்கள் மற்றும் போர் தொழில்நுட்பங்கள் பரவலான மாசுபாடு, கதிர்வீச்சு மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தும். இது பல்லுயிர் இழப்பு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நீண்ட கால சுகாதார விளைவுகளை உண்டாக்கலாம்.
ஒருவேளை மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டால் வளிமண்டலத்தில் அதிக அளவு புகை, தூசி மற்றும் குப்பைகள் சேர்ந்து சூரிய ஒளியைத் தடுக்கும். இது உலகளாவிய வெப்ப நிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இதனால் பயிர்கள் சேதமடைந்து பஞ்சம் மற்றும் மனித வாழ்க்கை சீரழிவு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மூன்றாம் உலகப்போர் பற்றிய நமது கற்பனையே இந்த அளவுக்கு கொடூரமான விஷயங்களை உள்ளடக்கி இருப்பதால், ஒருவேளை உண்மையிலேயே அது நடந்தால் அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்.
இந்த கற்பனையை நமக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். உலக நாடுகள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அமைதியாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். எதற்கும் போர் என்பது ஒரு தீர்வாகாது என்பதை உலக நாடுகள் உணர்ந்தால், மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான தேவை இருக்காது.