கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை யாரும் படைக்காத ஒரு அரியச் சாதனையை மூன்று இந்திய வீரர்கள் சேர்ந்து நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்திய அணியும் இந்திய அணியின் வீரர்களும் பல எதிர்பாராதச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். முதல் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்த இந்திய அணி பின்னர் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுத் தொடரைக் கைப்பற்றியது.
இப்போது கடைசிப் போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றிபெற்றால் ஐந்தில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற சாதனையை இந்திய அணி படைக்கும். அதேபோல் இதில் வெற்றிபெற்றால் வெளிநாட்டில் விளையாடும் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தால் கூட உலக டெஸ்ட் போட்டிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கும். ஆகையால் மிகவும் கவனத்துடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
அந்தவகையில் ஆட்டம் தொடங்கிய முதலே இந்திய அணி எந்த அழுத்தமும் இல்லாமல் மிகவும் ரிலாக்ஸாக விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியபோதுதான் இந்தச் சாதனையை நிகழ்த்தியது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 110 ரன்களை விளாசினார். ரோஹித் சர்மா 103 ரன்களைக் குவித்தார். அரைசதம் மற்றும் சதங்கள் அடித்த இந்த மூன்று வீரர்களுமே சிக்ஸர்களையும் விளாசினர்.
அதாவது ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர்களையும் ரோஹித் 3 சிக்ஸர்களையும் சுப்மன் கில் 5 சிக்ஸர்களையும் விளாசினார்கள். மூவருமே மூன்று மற்றும் அதற்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துத் தெறிக்கவிட்டனர். கிரிக்கெட் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் இதுப் போன்ற சாதனையைப் படைத்ததேயில்லை.
அதாவது ஒரு அணியில் மூன்று வீரர்கள் மூன்று சிக்ஸர்களை அடித்தது இதுவே முதல்முறை. இந்தச் சாதனையைப் படைத்த முதல் அணி இந்திய அணிதான். இந்திய அணியின் பெருமை கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்தநிலையில் இந்திய அணி தற்போது 217 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.