Aryna Sabalenka and Novak Djokovic.
Aryna Sabalenka and Novak Djokovic. 
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ்: அரையிறுதியில் சப்லென்கா, ஜோகோவிச்!

ஜெ.ராகவன்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் பெலாரஸின் அரினா சப்லென்கா, அமெரிக்காவின் கோகோ கவூப் மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 2 ம் , 6-2, 6-3 என்ர நேர் செட் கணக்கில் 9 ஆம் இடத்தில் இருந்த செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவை எளிதில் வென்று அரையிறுதியில் நுழைந்தார்.

 மற்றொரு அரையிறுதியில் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் கோக்கோ கவூப் 7-8 (8-6) 6-7, (3-7) 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக்கை வீழ்த்தினார். இந்த போட்டி 3 மணி நேரம் நீடித்தது.

இதைத்தொடர்ந்து அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான சப்லென்கா, கோகோ கவூப்புடன் மோதுகிறார். இதில் சப்லென்கா கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு 6-வது முறையாக முன்னேறியிருக்கிறார். கோகோ கவூப் முதல் முறையாக அரையிறுதியை எட்டியுள்ளார்.

இருவரும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் கோகோ கவூப் 4 முறை வென்றுள்ளார். கடைசியாக இருவரும் கடந்த ஆண்டு யு.எஸ். ஓபன் இறுதிச் சுற்றில் மோதியபோது சபலென்காவை வீழ்த்தி கோகோ கவூப் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதியில் உலகின் நெ.1 வீர்ரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதிபெற்றார். காலிறுதியில் அவர் 7-6 (7-3), 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் 11 வது முறையாக அரையிறுதியில் நுழைந்துள்ளார் ஜோகாவிச். கடந்த 2018 முதல் அவர் தொடர்ந்து 33 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். அரையிறுதியில் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொள்கிறார்.

முன்னதாக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சின்னர், 6-4, 7-6, 6-3 என்ற செட்கணக்கில் ரஷியாவின் ஆண்ட்ரே ருபேலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஒபனில் அரையிறுதியில் அவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஜோகாவிச்-சின்னர் இருவரும் 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் ஜோகோவிச் 4 முறை வென்றுள்ளார். 

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

481 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டம்!

மின்சார வாகனங்களின் இருண்ட பக்கம்! 

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

SCROLL FOR NEXT