விளையாட்டு

ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் வெற்றியை தடுத்தது மழை!

ஜெ.ராகவன்

ங்கிலாந்துக்கு எதிராக ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய அணி ஆஷ்ஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள நான்கு போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா, 2-1 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. முதநான்காவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்த்து. இன்னும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி பாக்கி இருந்தாலும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைப்பது உறுதியாகிவிட்டது.

முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தேநீர் இடைவேளைக்குப் பின் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நின்றது. எனினும் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 60 ரன்கள் பின்தங்கியே இருந்த்து.

சனிக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. இதையடுத்து உணவு இடைவேளையை முன்னதாக முடித்துக் கொண்டு ஆட்டத்தை தொடங்கலாம் என இரு அணியினரும் காத்திருந்தனர். ஆனால், மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறவில்லை. மழை தடுத்ததால் நான்காவது டெஸ்ட் போட்டியை வெல்லும் இங்கிலாந்தின் கனவு தகர்ந்த்து.

சுருக்கமான ஸ்கோர்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 371 ரன்கள்.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 592 ரன்கள்.

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள். மார்னஸ் லபஸ்சாக்னே சிறப்பாக விளையாடி 11 ரன்கள் குவித்தார். மிட்செல் மார்ஷ் 31 ரன்களுடனும் கேமரான் கிரீன் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனினும் மழை குறுக்கிட்டதால் கடைசி நாட்டம் தடைபட்டு டிராவில் முடிந்தது.

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

SCROLL FOR NEXT