வெள்ளி பதக்கத்துடன் பிரணாய் 
விளையாட்டு

ஆஸி.ஓபன் பாட்மிண்டன்: வெள்ளி வென்றார் பிரணாய்

ஜெ.ராகவன்

ஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  ஆடவர் இறுதிச்சுற்றில் சீன வீர்ர் வெங் ஹாங் யாங்கிடம் இந்திய வீர்ர் பிரணாய் 9-21, 23-21, 20-22 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்த்தார். இதையடுத்து  அவருக்கும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

பிரணாய் ராய் முனைப்புடன் விளையாடியபோதிலும் சீன வீர்ர் வெங், அவரது முயற்சியை தடுத்து விளையாடி பிராணாய் தங்கம் வெல்லும் வாய்ப்பை தகர்த்தெரிந்தார்.

கடந்த மே மாதம் மலேசியன் மாஸ்டர்ஸ் போட்டியில் தோல்வி கண்ட வெங், இந்த வெற்றியின் மூலம் பிரணாயை பழிதீர்த்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற கொரியா ஓபன் மற்றும் 2019 இல் நடைபெற்ற சீன மாஸ்டர் போட்டியில் பட்டம் வென்றவர் வெங் ஹாங் யங் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பல தடைகளை கடந்து மீண்டுவந்த பிரணாய், காலிறுதியில்  உலகின் 2 ஆம் நிலை ஆட்டக்காரரான  அந்தோனி ஜின்டிங்கை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் பிரணாய்க்கு சிறு சறுக்கல்கள் ஏற்பட்ட போதிலும் நிதானமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்று புள்ளிகளை வென்றார். ஆனாலும் இறுதிப் போட்டியில் அவர் வெங்கிடம் தோல்வி அடைய நேர்ந்தது.

முதல் சுற்று ஆட்டத்தில் பிராணாய் செய்த தவறுகளை வெங் தனக்கு சாதமாக்கிக் கொண்டார். அடுத்த இரண்டு ஆட்டங்களில் பிரணாய் சுதாரித்துக் கொண்டாலும் இறுதியில் வெங் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.

முதலிடம் பிடித்த சீன வீரர் வெங், வெள்ளி பதக்கத்துடன் பிரணாய்

முன்னதாக இரண்டு முறை ஓலிம்பிக் பதக்கம் வென்றவரும், தொடர் தோல்வியால் 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டவருமான  பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் காலிறுதியில், அமெரிக்க வீராங்கனையும் உலகில் 12 ஆம் நிலை ஆட்டக்காரருமான பெய்வென் ஜாங்கிடம் 12-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீர்ரான கிடம்பி ஸ்ரீகாந்த், காலிறுதியில் சக வீர்ரும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியனுமான ரஜாவத்திடம் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT