நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணி விளிம்பு வரை சென்று வெற்றிபெற்றது, அனைவரையும் திகைப்பு கலந்த சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணி நேற்று எந்தப் பதற்றமும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது. வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், போட்டியின் விறுவிறுப்பை மட்டுமே தாங்கி நின்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ததில், அனைத்து வீரர்களும் அடுத்தடுத்த அவுட்டாகி வெளியேறினர். 19 ஓவர்களிலேயே 119 ரன்களுடன் ஆட்டம் முடித்தது. இந்திய அணி வெறும் 89 ரன்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இந்தியஅணியைபோலவே அதுவும் 12 ஓவர்களில் 72 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது.
ரோஹித் ஷர்மா இந்திய வீரர்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசியதன் பின்னர், பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆகையால், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி.
இந்த வெற்றிக்குப் பிறகு ரோஹித் பேசியதாவது, “நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எங்களுடைய பாதி இன்னிங்க்ஸின் முடிவில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், அதன்பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தோம். இந்த பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று நாங்கள் அறிவோம். இந்த பிட்ச்சில் ரன் குவிக்கும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் நாங்கள் குறைவான ஸ்கோரே எடுத்தோம். எங்கள் அணியின் பந்துவீச்சு பலமாக இருந்ததால், நாங்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம் என உறுதியாக இருந்தேன். பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது பாதி இன்னிங்க்ஸின் முடிவில், நான் இந்திய வீரர்களை அழைத்து பேசினேன். நமது பேட்டிங் வரிசையில் சரிவை சந்தித்தோம். அதேபோல அவர்களும் பேட்டிங் வரிசையில் சரிவை சந்திப்பார்கள்." என்று பழி வாங்குவதுபோல் பேசி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.
பின்னர் பும்ரா பற்றி அவர் பேசுகையில், “பும்ரா எப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் என்ன செய்வார் என நாம் அனைவருக்கும் தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. அவர் இதே போன்ற மனநிலையில் உலகக் கோப்பை முழுவதும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு அதிமேதாவி. அது நம் அனைவருக்கும் தெரியும்." என்றார்.