DC team 
விளையாட்டு

DC vs LSG: டெல்லி அணிக்கு இரண்டாவது வெற்றி… புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

பாரதி

நேற்று லக்னோ அணி மற்றும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது. இதனையடுத்து டெல்லி அணி இந்தத் தொடரில் இரண்டாவது முறை வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக டி காக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள். மூன்றாவது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில், டி காக் 19 ரன்களில் LBW முறையில் அவுட்டானார். அதேபோல் அவருடைய பந்தில் படிக்கல்லும் 5வது ஓவரில் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

அவர்களைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் பூரனும் அடுத்தடுத்து அவுட்டானதால், லக்னோ அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணிக்கு வலுவான ரன்களை சேர்க்கப் போராடிய கே.எல்.ராகுலும் 39 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. அடுத்த 10 ஓவர்களில் விளையாடிய வீரர்களும் சொல்லிக்கொள்ளும்படி ரன்களை சேர்க்கவில்லை. ஆகையால் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் 8 ரன்களில் அவுட்டாக, ப்ரித்வி ஷா 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதனையடுத்து ஜேக் ஃப்ரேசர் 35 பந்துகளில் 55 ரன்கள் அடித்து விரைவாக ரன்களைச் சேர்த்தார். அதேபோல் ரிஷப் பண்டும் 24 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். இந்த இரண்டு அதிரடி ஆட்டங்களால் டெல்லி அணி வேகமாக இலக்கை நோக்கிச் சென்றது. பின், ஸ்டப்ஸ் மற்றும் ஹோப் ஆகியோர் இறுதியாக களமிறங்கி, அணியின் இலக்கான 168 ஐ தாண்டி 18.1 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.

இதனால் டெல்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. டெல்லி அணி 6 போட்டிகளில் 2 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் லக்னோ அணி ஐந்து போட்டிகளில் 3 போட்டிகள் வென்று  புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT