Ravichandran Aswin 
விளையாட்டு

நானாக இருந்தால் சென்னை அணியில் இந்த ஆறு வீரர்களையே தேர்ந்தெடுப்பேன்- அஸ்வின்!

பாரதி

ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வாகத்தில் ஒருவராக நான் இருந்தால் இந்த ஆறு வீரர்களையே தேர்ந்தெடுத்து, ஏலத்தில் இவர்களை எடுப்பேன் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திர அஸ்வின்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வரும் அக்டோபர் 31ம் தேதி இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். Uncapped player ஆக தோனியை 4 கோடி கொடுத்து வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அஸ்வின் பேசியிருக்கிறார். அதாவது “தோனியை அன்கேப்புடு முறையில் தேர்வு செய்யாமல் சாதாரண வீரராக தேர்ந்தெடுக்க வேண்டும். பலரும் சென்னை அணியில் இந்த வீரர்களையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். நானும் கூறுகிறேன்.

எனது கோணத்தில் பார்த்தால், ஒருவேளை நான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் ஒருவராக இருந்தால், ருதுராஜ், ஜடேஜா துபே, பதிராணா மற்றும் தோனியை நான் தக்கவைத்துக் கொள்வேன். குறிப்பாக தோனியை நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராக தான் கருதுவேனே தவிர uncapped வீரராக கருத மாட்டேன். இந்த ஐந்து வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டு ஆறாவது வீரராக சமீர் ரிஸ்வியை ஆர் டி எம் கார்டு மூலம் ஏலத்தில் நான் மீண்டும் தேர்வு செய்வேன்.” என்று கூறினார்.

மேலும் பேசுகையில், “சென்னை அணியில் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் பதிராணா. அதேபோல், ருதுராஜ்  தொடக்க வீரராக களமிறங்குவார். சிவம் துபே, நடு வரிசையிலும் ஜடேஜா பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்துவீச்சாளராகவும் இருப்பார். சமீர் ரிஸ்வி உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

ஆகையால் அவரை தேர்ந்தெடுத்தால் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் நன்றாக இருக்கும். நிதிஸ் ரெட்டியை போலவே சமீரும் சிறந்த வீரர் ஆவார். எனவே ஆறு வீரர்களை தேர்ந்தெடுத்துவிட்டு மூன்று பவுலர்களையும் ஒரு பேட்ஸ்மேனையும் ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டும்.” என்று அஸ்வின் பேசினார்.

எந்தெந்த அணிகள் யாரை தேர்ந்தெடுத்திருக்கிறது, யார்யாரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.


முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT