விளையாட்டு

அல்சர் பிரச்சனையா அப்ப இதை படிங்க...!

கல்கி டெஸ்க்

அல்சர் எப்படி உருவாகிறது தெரியுமா?

நம் இரைப்பை மற்றும் சிறுகுடலில் ஆரம்பப் பகுதியில்அல்சர் உருவாகும். நாம் உண்ணும் உணவு இறைப்பைக்குச் சென்றதும் அங்கு அமிலங்களால் குழப்பப் பட்டு ஒருவகையான ஜீரணமாற்றத்தை அடையும். விரல் வெந்துவிடும் அளவிற்கு வீரியமிக்க அமிலம் அது.இரைப்பையின் சுவர்கள் வலுவானவை என்பதால் அமிலங்களால் ஒன்றும்ஆவதில்லை.

ஆனால் H- பைலோரி கிருமிகளாலோ,பிற காரணங் களாலோ அமிலங்களின் உற்பத்தி அதிகமாகும் போது

இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கே புண் உருவாகும். அதைத்தான் நாம் அல்சர் என்கிறோம்.

H-பைலோரி வரக் காரணம் என்ன தெரியுமா ?

1 சுத்தமற்ற சுகாதாரமற்ற உணவை உண்ணுதல்.

2 பாத்திரங்களை சரிவர கழுவாமல் அதிலேயே சாப்பாடு

போட்டு சாப்பிடுவது.

3 உணவை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, மீதத்தை அப்படியே

வைத்திருந்து, மீண்டும் ஒரு முறை சாப்பிடுவது.

4 கெட்டுப் போயிருந்தாலும் அதை ஃபிரிட்ஜில் வைத்து,

நாள்பட்டு உண்பது.

5 பயணத்தின் போதோ,அவசர தேவைக்கோ சுகாதாரமற்ற

ரோட்டோர ஹேட்டல்களில் சாப்பிடுவது.

6 திறந்து வைத்திருக்கும் உணவு, தின்பண்டங்களை

வாங்கிச் சாப்பிடுவது.

இவையெல்லாம்தான் H-பைலோரி கிருமி நம் குடலுக்குள் நுழையக் காரணமாகின்றன என்று கூறப்படுகிறது.

அல்சர் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்:

அல்சர் இருக்கும் போது, அதற்கான மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர, ஒரு குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலம் விரைவில் அல்சரை குணப்படுத்தலாம். அதுவும் பழங்களை சாப்பிடுவது இன்னும் நல்லது.

ஸ்ட்ரோபெர்ரி

ஸ்ட்ரோபெர்ரி வயிற்றுப் புண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி - ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ரோபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.

மாதுளை

வயிற்றுப் பிரச்சினைகள் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை செரிமான பிரச்சினைகளால் ஏற்படுகிறது. மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

முலாம் பழம்

முலாம் பழத்தில் விட்டமின் சி ஏராளமாக உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சினைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும் முலாம் பழம் உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் 90% நீர் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளதால், இது நெஞ்செரிச்சல் பிரச்சினைகளையும் தடுக்கிறது.

பலாப்பழம்

பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சினைகள சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

இது பைல்ஸ் பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதோடு இது ஆராக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற இரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது.

இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். மேலும் நெல்லிக்காய் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் பிற குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது.

ஆண் பனைகள் பெண் பனைகளான அற்புதம் நிகழ்ந்த இடம் எது தெரியுமா?

A Magical Journey On The Rocking Horse!

Penny Stocks பற்றிய முழு விவரங்கள் இதோ!

பிள்ளையார் மற்றும் முருகனில் யாருக்கு முதலில் திருமணம் நடந்தது? ஶ்ரீ சைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் ஸ்தல வரலாறு!

சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் வாங்க! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!

SCROLL FOR NEXT