Rohit Sharma
Rohit Sharma 
விளையாட்டு

600 சிக்ஸர் சாதனை நோக்கி ரோகித் ஷர்மா! எவ்வளவு முக்கியமான சாதனை தெரியுமா?

பாரதி

ர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பாதியிலேயே 600 சிக்ஸர்களைத் தொட்டு வரலாற்று சாதனை நோக்கி செல்கிறார் ரோகித் சர்மா. இது 146 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனையாகும்.

கிரிக்கெட்டில் பல சாதனைகள் இதுவரை நிகழ்ந்திருக்கிறது. கிரிக்கெட்டில் சாதனைகள் ஏராளம் சாதனைப் படைத்தவர்களும் ஏராளம். ஆனால் எந்த வீரர் சாதாரண மக்களின் மனதிலும் நிலைத்து நிற்பார் என்றால், அது அதிக ரன்கள் எடுத்தவரும் அதிக சிக்ஸர்கள் எடுத்தவரும் தான்.

பொதுவாக அதிக சிக்ஸர் எடுத்தவரே வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் ஒரு படத்தின் சிறந்த கதாநாயகனை எப்படி அனைத்து மக்களும் விரும்புகிறார்களோஅதேபோல் தான் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடிப்பவரையும் விரும்புவார்கள்.

அந்தவகையில் சர்வதேச அளவில் அதிக சிக்ஸர்கள் எடுத்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரோகித் ஷர்மா. ரோகித் இதுவரை அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சுமார் 582 சிக்ஸர்களை அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் 553 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில், மூன்றாவது இடத்தில் 476 சிக்ஸர்களுடன் சையது ஆப்ரிடி உள்ளனர்.

அடுத்ததாக 398 சிக்ஸர்களுடன் மெக்குலம் நான்காவது இடத்திலும் 383 சிக்ஸர்களுடன் குப்தில் ஐந்தாவது இடத்திலும் 359 ரன்களுடன் தோனி ஆறாவது இடத்திலும் உள்ளனர். இந்த வரிசையில் 500 சிக்ஸர்களுக்கு மேல் எடுத்தது ரோகித் ஷர்மாவும், கிறிஸ் கெயிலும் தான். ரோகித் ஷர்மா 600 சிக்ஸர்கள் அடிக்க இன்னும் 18 சிக்ஸர்களே தேவைப்படுகிறது.

இதுவரை கிரிக்கெட் சரித்திரித்திலேயே 600 சிக்ஸர்கள் எந்த கிரிக்கெட்டருமே எடுத்ததில்லை. அந்த சாதனையை எட்டப் போகும் முதல் வீரர் இந்திய வீரர் ரோகித் ஷர்மாவே. அதுவும் இந்த ஆண்டு இந்திய அணி டி20, டெஸ்ட் போட்டிகள் என நிறைய தொடர்களில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டின் பாதியிலேயே ரோகித் ஷர்மா 18 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துவிடுவார் என ரிப்போர்ட் கூறுகிறது.

இதேபோல் பவுலிங்கில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அதன்பின்னர் ரோகித் ஷர்மா பேட்டிங்கில் தகர்க்க முடியாத ஒரு சாதனையைப் படைப்பார் என்றே ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT