விளையாட்டு

WTA டென்னிஸ் போட்டி: இந்திய வீராங்கனை காலிறுதிக்குத் தகுதி!

கல்கி டெஸ்க்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.டி.எ மைதானத்தில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி இரட்டையர் பிரிவில் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டித் தொடரில்  ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த கர்மன் தண்டி, கனடா வீராங்கனை யூஜெனி பவுச்சார்ட்டுடன் மோதி 2-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியுற்றார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கர்மன் தண்டி வெற்றி பெற்றார்.

இந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ருதுஜா போஸ்லா மற்றும் கர்மன் தண்டி ஜோடி இந்தியாவின் பிரார்த்தனா தோம்பர் மற்றும் இந்தோனேசியாவின் ஜெஸ்ஸி ரோம்பீஸ் ஜோடியை எதிர்கொண்டு ஆடி, 3-6, 7-6, 10-4 என வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றி வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் ருதுஜா போஸ்லா, மற்றும் கர்மன் தண்டி ஜோடி இந்த டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்குத் தகுதி முன்னேறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT