Gautam Gambhir 
விளையாட்டு

ரகசிய பயிற்சியில் இந்திய அணி… கம்பீரின் மாஸ்டர் ப்ளான் வெற்றியடையுமா?

பாரதி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி பலருக்கும் ஒரு கடைசி வாய்ப்பாக அமைந்துள்ள நிலையில், இந்திய அணி யாருக்கும் தெரியாமல் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கவுதம் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பயிற்சி அளிப்பார். ஆனால், டெஸ்ட் போட்டியில் அவ்வளவாக அவருக்கு அனுபவம் கிடையாது என்று பலரும் கூறினர்.

அதற்கேற்றவாரு சமீபத்தில்  நடந்து முடிந்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு  இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு போட்டிக்கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை. இந்தியா தனது சொந்த மண்ணில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைந்து மோசமாக விமர்சிக்கப்பட்டது.

இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் மோசமாக விமர்சிக்கப்பட்டனர். ரோஹித் ஷர்மா இதற்கு கேப்டன்தான் காரணம் என்று தன்னையே காரணம் காட்டியிருந்தார்.

மேலும் இந்திய ஆடுகளங்கள் தயாரிப்பில் இருந்து அணித்தேர்வு வரை அனைத்திலும் தலைமை பயிற்சியாளரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுவே இந்திய அணியின் மோசமான தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் அடுத்து இந்தியா  மோதவிருக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரே கம்பீருக்கு இறுதி வாய்ப்பு என்றும், அப்படி அதிலும் சொதப்பினார் என்றால் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் பிசிசிஐ அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கும் இதுவே கடைசி வாய்ப்பு எனவும் பிசிசிஐ தெரிவித்ததாக செய்திகள் வந்தன.

ஆகையால் ஆஸ்திரேலியா உடனான போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

மற்ற நாட்டு ஆடுகளங்களை விட ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலிய வீரர்களின் வேக பந்துவீச்சை எதிர்கொள்ள முதலில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பிட்சின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள பயிற்சியாளர் கம்பீர், உலகின் அதிவேகமான மைதானம் என்று பெயர் பெற்ற வாக்கா (WACA) மைதானத்தில் இந்திய அணிக்கு பயிற்சி தர முடிவெடுத்திருக்கிறார்.

இந்த வாக்கா மைதானம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் கைவிடப்பட்டதாகும். ஆனால், இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடினால் வேறு எந்த மைதானத்திலும் விளையாடிவிடலாம் என்பதால் கம்பீர் இந்த திட்டத்தை தீட்டிருக்கிறார்.

இது வெற்றியில் முடியுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT