விளையாட்டு

முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா அபார சாதனை!

கல்கி டெஸ்க்

ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன்பட்டம் வென்று இந்தியா அபார சாதனை படைத்துள்ளது . சாம்பியன் பட்டம்வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணிமுதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 2 - 1 என்றகோல் கணக்கில் தென் கொரிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.

8 வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது.

ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசியகோப்பை ஹாக்கி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில்சீனாவை தோற்கடித்து இந்தியா இறுதி போட்டியில் நுழைந்தது. 10 அணிகள்பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள்இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்தனர்.

அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்தியஅணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தபோட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில்வீழ்த்தியது. இந்திய அணிக்காக 22வது நிமிடத்தில் அன்னுவும், 41வது நிமிடத்தில்நீலமும் கோல் அடித்து இந்த வெற்றியை சாத்தியமாக்கினர்.

ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன்பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி 4 வெண்கலப் பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கததையும் வென்றுள்ளது. மேலும்கடந்த 2016ஆம் ஆண்டு ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்த நிலையில், தற்போது முதல்முறையாகஇந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம்சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். இந்திய பெண்கள் அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் நம் தேசத்தைமிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT