அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஃபிபா சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கி வருகிறது. மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி கடந்த ஆண்டுக்கான ஃபிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான விருது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இது மெஸ்ஸியின் 2வது விருதாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து – 2022 போட்டி கத்தாரில் நடைபெற்றது. இந்த போட்டியின், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்தது.
சிறந்த பயிற்சியாளருக்கான ஃபிபா விருதானது, உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஃபிபா சிறந்த வீரருக்கான விருதை அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி பெற்றார். சிறந்த கோல்கீப்பர் விருது சாம்பியனான அர்ஜென்டினா அணியின் எமிலியானோ மார்டினேஸ் அளிக்கப்பட்டது.
லியோனல் மெஸ்ஸி கால்பந்து போட்டியில் 700 கோல்களை அடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனது நீண்ட கால போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் தற்போது இவர் இணைந்துள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ 954 போட்டிகளில் 706 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
பிபா சிறந்த வீராங்கனைக்கான விருதினை அலெக்ஸியா புடெல்லாஸ் பெற்றார். இவர் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இந்த விருதினை பெறுகிறார். மகளிர் அணியின் சிறந்த பயிற்சியாளருக்கான விருது, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் சரீனா வெயிக்மென் பெற்றார்.
மகளிர் பிரிவில் சிறந்த கோல்கீப்பர் விருது, இங்கிலாந்தின் மெரி அர்ப்ஸ் கொடுக்கப்பட்டது. சிறந்த கோலுக்கான விருது போலந்து வீரர் மார்சின் ஒலக்சிக்கும், சிறந்த ரசிகர்களுக்கான விருதானது அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் வழங்கப்பட்டது.