Paralympic 2024 
விளையாட்டு

தேசத்திற்கு பெருமை சேர்த்த பாராலிம்பிக் வீரர்கள்!

ராஜமருதவேல்

ஒலிம்பிக்கை போல இல்லாமல் பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சாதித்து உள்ளனர். பதக்கப் பட்டியலில் 14 வது இடம் வரை முன்னேறிய இந்திய வீரர்கள் இறுதியில் தங்கம் 7, வெள்ளி 9 ,வெண்கலம் 13 என்று பதக்கங்களை குவித்து 18 வது இடத்தை பிடித்து நாட்டிற்கு கவுரவம் சேர்த்துள்ளனர்.

முன்னதாக கடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சில வெள்ளி , வெண்கல பதக்கங்களை வென்றிருந்தாலும் பதக்கப் பட்டியலில் ஒரே ஒரு தங்கப்பதக்கம் பெற்ற பாகிஸ்தானை விட மிகவும் பின்தங்கி இருந்தது. இது உலக அளவில் இந்தியாவை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. பலகாலமாக ஒலிம்பிக்கில் ஏதாவது ஒரு பதக்கம் பெறும் இந்தியா இம்முறை சில பதக்கங்கள் கூடுதலாக பெற்றாலும் அது இந்தியாவின் தகுதிக்கு சரியானதாக இல்லை என்று சர்வதேச விளையாட்டுத் துறையினர் விமர்சிக்கின்றனர்.

இந்தியா சர்வதேச அரங்கில் ஐரோப்பிய நாடுகளை பின்தள்ளி 4 வது ஆயுத வலிமை மிக்க நாடாகவும் 5 வது பெரிய பொருளாதார வல்லமை மிக்க நாடாகவும் உள்ளது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா செல்வாக்கு பெற்றுள்ளது. ரஷ்யாவும் சீனாவும் சர்வதேச விவகாரங்களில் அரசியல் ரீதியில் புறக்கணிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் விளையாட்டுத் துறையிலும் இந்தியாவில் எழுச்சியை சர்வதேச நாடுகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

Paralympic 2024

இந்த விமர்சனத்தை போக்கும் வகையில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் சாதித்து நாட்டை தலை நிமிரச் செய்துள்ளனர்.

பதக்கம் பெற்ற வீரர்களின் பட்டியல்:

தங்கப் பதக்கம் வென்றவர்கள்:

  1. அவானி லெகாரா - துப்பாக்கி சுடுதல் 10மீ 

  2. நிதீஷ் குமர் -  பேட்மிண்டன்

  3. சுமித் அண்டில் - ஈட்டி எறிதல் 

  4. நவ்தீன் சிங் - ஈட்டி எறிதல் 

  5. ஹர்விந்தர் சிங் - வில்வித்தை 

  6. பிரவீன் குமார் - உயரம் தாண்டுதல் 

  7. தரம்பீர் - கிளப் த்ரோ

வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்:

  1. மணிஷ் நார்வால் -  10 மீ ஏர் பிஸ்டல் 

  2. நிஷாத் குமார் - உயரம் தாண்டுதல் 

  3. யோகேஷ் கதுனியா - வட்டு எறிதல் 

  4. துளசிமதி முருகேசன் - பேட்மிண்டன் 

  5. சுஹாஸ் எத்திராஜ் - பேட்மிண்டன் 

  6. ஷரத் குமார் - உயரம் தாண்டுதல் 

  7. பிரனவ் சூர்மா - கிளப் த்ரோ

  8. அஜீத் சிங் - ஈட்டி எறிதல்

  9. சச்சின் கில்லாரி -குண்டு எறிதல்

வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்: 

  1. மோனா அகர்வால் - 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் 

  2. பிரீத்தி பால் - மகளிருக்கான 100 மீ ஓட்டப்பந்தயம் 

  3. ரூபினா ஃபிரான்சிஸ் -  10 மீ ஏர் பிஸ்டல் 

  4. மனிஷா ராமதாஸ் - பேட்மிண்டன் 

  5. ராகேஷ் குமார் /ஷூத்தல் தேவி - வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு 

  6. நித்ய ஸ்ரீ சிவன் - பேட்மிண்டன்

  7. தீப்தி ஜீவன்ஜி - 400 மீ ஓட்டப்பந்தயம்

  8. சுந்தர் சிங் குர்ஜார் - ஈட்டி எறிதல்

  9. மாரியப்பன் - உயரம் தாண்டுதல் 

  10. கபில் பார்மர் - ஜூடோ 60 கிலோ பிரிவு

  11. ஹகாடோ சீமா - குண்டு எறிதல் 

  12. சிம்ரன் சிங் - 20 மீ ஓட்டப்பந்தயம் 

  13. பிரீத்தி பால் -200 மீ ஓட்டப்பந்தயம்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT