விளையாட்டு

79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த பிரனேஷ்!

கல்கி டெஸ்க்

தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ், சர்வதேச செஸ் போட்டியில் 8 புள்ளிகள் எடுத்த நிலையில், இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டராக அந்தஸ்து பெற்றுள்ளார்.

தமிழகத்தின் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்தான் 16 வயதான பிரனேஷ். தனது 5 வயது முதலே செஸ் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டு விளையாடி வரும் பிரனேஷ், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் வென்றுள்ளதோடு, 12 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வந்தது. அப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் பங்கு பெற்றார். அதில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 8 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் சர்வதேச மாஸ்டர் பட்டத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார்.

அதன்படி, பிரனேஷ் இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இருநது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெறும் 28வது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனச்சோர்வைப் போக்கும் மாமருந்து!

அட… இதுதான் Thuglife சிம்பு லுக்கா? நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

ஹெல்தி ஹனி மிக்ஸ் தஹி சாலட்!

DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?

மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!

SCROLL FOR NEXT