pro kabaddi Sudhakar 
விளையாட்டு

புரோ கபடி சுதாகர் - பாசபறவை - பாட்னா!

கல்கி டெஸ்க்

கபடி சுதாகர் இவர் தற்போது நடந்துவரும் புரோ கபடியில் பாட்னா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பாளையநல்லூர் என்ற சின்ன கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே தன் சகோதரர்கள் மற்றும் ஊரிளுள்ள இளைஞர்கள் கபடி விளையாடுவதைப் பார்த்து அவர்களை போல தானும் கபடி விளையாட வேண்டும் என்ற ஆசை சுதாகருக்கு தோன்றியது.

இவர் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அப்போது பள்ளி அளவிளான குறுவட்டம், கல்வி வட்டம் மற்றும் மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.மேலும் பள்ளி பருவத்திலேயே தங்கள் கிராமத்திற்காக பாசபறவை என்ற அணிக்காக பல உள்ளூர் போட்டிகளில் அசத்தியுள்ளார். 2019 மற்றும் 2020ம் ஆண்டு திருச்சி மாவட்ட அணிக்காக தேர்வு செய்யபட்டார்.

அதன் பிறகு தேசிய அளவிளான போட்டிக்கு தமிழக அணிக்காகவும் தேர்வு செய்யபட்டு அங்கு வெண்கல பதக்கம் வென்றார். தனது கல்லூரி படிப்பினை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தொடர்ந்து அங்கு தனது கல்லூரி கபடி அணியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அளவிளான போட்டியில் சிறப்பாக‌விளையாடி தன்னுடைய jumpன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலமாக அவருக்கு யுவாகபடி தொடரில் பழனி அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்து. அங்கு வெள்ளி பதக்கமும் சிறந்த ரைடர் என்ற தொடர் விருதையும் பெற்றார். இதன் பிறகு அவர் ஐ.சி.எப். ( ICF ) அணிக்காக தொழில்முறை கபடி வாழ்க்கையை தொடங்கினார்.

pro kabaddi Sudhakar

இவர் தற்போது புரோ கபடி‌ சீசன் 10 ல் பாட்டா அணிக்காக ஆடி தனது முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றார். எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்று கபடி உலகில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து சிறந்த வீரராக விளங்கிவருகிறார் சுதாகர்.

- நித்தீஷ்குமார் யாழி

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT