இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற்றார். இதனையடுத்து இங்கிலாந்து பயிற்சியாளரும் ஓய்வுபெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு ராகுல் ட்ராவிடை நியமனம் செய்ய இயான் மோர்கன் பரிந்துரைத்துள்ளார்.
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆவார். ராகுல் ட்ராவிட் சென்ற ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரே ஓய்வுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ அவருடைய பதவிக்காலத்தை இந்தாண்டு உலகக்கோப்பை தொடர் வரை நீடித்தது. இவரின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் ட்ராவிட் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 2021-ல் பொறுப்பேற்றார்.
இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்றிருக்காவிட்டாலும் ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2022, டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றது இந்திய அணி. ட்ராவிடின் பயிற்சியில் 2023, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரன்னர், 2023, உலகக் கோப்பையிலும் ரன்னர் என அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடிய விதம் அனைவரையும் பெரிதும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிட்சில் குளறுபடி செய்ததும், கடும் அரசியல் நெருக்கடியினாலும் இந்திய அணி தோற்றது.
அந்தவகையில், டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் முடிவடைந்தது.
அதேபோல், தற்போது இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதாவது, “இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரை இலங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அணுகுவீர்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக மெக்கலம் அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தால் சந்தோஷம்.” என்றார்.