Rohit sharma 
விளையாட்டு

ரோகித் ஷர்மா இந்தப் போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவித்துவிடுவார் – ரோகித் முன்னாள் கோச்!

பாரதி

ரோகித் ஷர்மாவின் சிறு வயது கோச் ரோகித் ஷர்மாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஓய்வறிப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

இந்தியாவின் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று ஃபார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டவர் ரோகித் ஷர்மா. இவர் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் டி20 ஃபார்மெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோகித் ஷர்மாவிற்கு 37 வயது ஆவதால் அவரது ஓய்வு நேரமும் நெருங்கி வருகிறது.

இதனையடுத்து இதுகுறித்து அவரது சிறு வயது பயிற்சியாளரான தினேஷ் லாட் பேசுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தொடருக்கு பின்னர் ரோகித் ஓய்வுபெறுவார் என்று கூறவில்லை. ஆனால், அவரது வயதை கருத்தில்கொண்டு அவர் டெஸ்ட்டில் ஓய்வுபெறுவார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ள கூட டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறலாம். இதனால் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பையில் ரோகித் சர்மா 100 சதவீதம் நிச்சயமாக விளையாடுவார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். ரோகித் சர்மா விளையாடும் ஒரு விதமான கிரிக்கெட் நம்ப முடியாத வகையில் இருக்கும்.” என்று பேசியிருக்கிறார்.

ரோகித் ஷர்மா கேப்டன்ஸியில் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஒரு போட்டிக்கூட தோல்வியில்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு ஏமாற்றமாக அமைந்தது. அதேபோல்தான் இந்திய அணி வீரர்களுக்கும். குறிப்பாக ரோகித் ஷர்மா மிகவும் உடைந்துப்போனார்.

பின் ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் வென்றது. ஆனால், ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வதே தனக்கு மிகவும் முக்கியம் என்று ரோகித் சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால், ஒரு நாள் உலகக்கோப்பையில் நிச்சயம் விளையாடுவார் என்றும், அதன்பிறகு ஒருநாள் ஃபார்மெட்டில் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT