Ronaldo 
விளையாட்டு

கால்பந்து வரலாற்றிலேயே யாரும் அடிக்காத கோல்களை அடித்து சாதனைப் படைத்த ரொனால்டோ!

பாரதி

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் - குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளார்.

ரொனால்டோ தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். 2022ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பையில் ரொனால்டோ சரியாக விளையாடவில்லை என்பதால், அவர்மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்ததை இந்த நேஷ்னல் லீக் ஆட்டத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டு நேஷ்னல் லீக் போட்டியில் போர்ச்சுகல் குரோஷியா அணிகள் மோதின. முதலில் போர்ச்சுகல் அணியின் டியோகோ டாலட் முதல் கோலை அடித்தார். அடுத்து ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது குரோஷியா அணிக்கு எதிராக அவர் அடித்த 131வது கோலாகும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த கோல் அவரின் 900வது கோலாகும். இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காகவே அதிக கோல்களை அடித்திருக்கிறார். அந்த அணிக்காக மட்டும் 450 கோல்களை அடித்து இருக்கிறார். யுவன்டஸ் அணிக்காக சீரி ஏ தொடரில் 121 கோல்களை அடித்து இருக்கிறார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145 கோல்களையும், ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களையும் அடித்து இருக்கிறார். அவர் தற்போது ஆடிவரும் அல் நசர் அணிக்காக 68 கோல்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் மற்றொரு ஜாம்பவான் ஆன லியோனல் மெஸ்ஸி இருக்கிறார். அவர் 859 கோல்களை அடித்திருக்கிறார்.

ரொனால்டோ சில நாட்களுக்கு முன்னர் கண்டிப்பாக 1000 கோல்களை அடிப்பேன். 900 கோல் என்ற சாதனையை படைப்பதற்கு எனக்கு இன்னும் ஒரு கோல் மட்டும் தான் இருக்கிறது. அந்த சாதனையை விரைவில் செய்வேன் என்று கூறி இருந்தார்.
அதேபோல் தற்போது 900 கோல்களை அடித்துவிட்டார். அடுத்து அவருடைய இலக்கு 1000 கோல்கள்தான். இந்த நிலையில் தான் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால், ரொனால்டோ ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.




தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT