Row Sowing 
விளையாட்டு

மகசூலை அள்ளிக் கொடுக்கும் வரிசை விதைப்பு டெக்னிக்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

விவசாயத்தில் அதிக மகசூல் ஒன்றே விவசாயிகளுக்கு இலாபத்தைப் பெற்றுத் தரும். விவசாயப் பயிர்களில் மகசூலை அதிகரிக்க விவசாயிகள் பல யுக்திகளை கையாள்கின்றனர். இருப்பினும் வரிசை விதைப்பு சூட்சுமத்தையும் நிலத்தில் கையாண்டால் நிச்சயமாக மகசூல் அதிகரிக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? தெரிந்து கொள்ளலாம் வாங்க!

விவசாயத்தில் விதைகளின் தரத்திற்கு ஏற்பவும், உரங்களின் வீரியத்திற்கு ஏற்பவும் மகசூல் அதிகமாகும். இதுதவிர நிலத்தின் தன்மை, நீர்ப்பாசனம் மற்றும் காலநிலை போன்ற பல காரணிகள் மகசூலை நிர்ணயிக்கின்றன. தற்போதைய சூழலில் தரமான விதைகள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி விட்டது. விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்யும் நிலை வந்தால் மட்டுமே இது முழுமையாக சாத்தியப்படும். இருப்பினும், மகசூலை அதிகரிக்க உதவும் மற்றுமொரு வழிமுறை தான் வரிசை விதைப்பு. இதன்மூலம் 10% முதல் 20% வரை மகசூலை அதிகரிக்க முடியும் என வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வரிசை விதைப்பு:

வரிசை விதைப்புக்கு சான்று பெறப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற குறுகிய மற்றும் மத்திய அரசின் சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு விதைக்கும் கருவிகளைக் கொண்டு வரிசைக்கு வரிசை 20 செமீ இடைவெளி விட்டு, 3 முதல் 5 செமீ ஆழத்தில் பயிருக்குப் பயிர் 15 செமீ இடைவெளி விட்டு, ஒரு ஏக்கரில் 15 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சீரான இடைவெளியில் விவசாயிகளால் பயிர்களை மிக எளிதாக பராமரிக்க முடியும்‌. விதைப்புக் கருவி கிடைக்காத பட்சத்தில், விவசாய வேலையாட்களின் மூலமும் அதே அளவில் வரிசை விதைப்பை மேற்கொள்ளலாம்.

குறைந்த செலவு:

பொதுவாக ஒரு ஏக்கருக்கு 35 கிலோ விதைகள் தேவைப்படும். ஆனால் விதைப்புக் கருவியைப் பயன்படுத்தினால் 15 கிலோ விதைகளே போதுமானதாக இருக்கும். இதன்மூலமாக விதைநெல்லிற்கான செலவு பாதிக்கும் மேல் குறையும். வரிசை விதைப்பில் பயிர்கள் இடைவெளி விட்டு காற்றோட்டத்துடன் வளரும் என்பதால், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களும் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக உரச் செலவும், பயிர்களுக்கான பாதுகாப்புச் செலவும் வெகுவாக குறையும். அதோடு பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருப்பதால், முன்பை விட கூடுதல் மகசூலும் கிடைக்கும்.

வரிசை விதைப்பு முறையில் செலவும் குறைவு; மகசூலும் அதிகம். ஆகவே, விவசாயிகள் இந்த முறையைப் பயன்படுத்தி நெல் விதைத்தால், நல்ல இலாபம் பெற முடியும். ஒருமுறை வரிசை விதைப்பு முறையின் பலன்களை விவசாயிகள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக இதனைத் தொடர்ந்து பின்பற்றுவார்கள்.

சில நேரங்களில் அதிக மகசூல் கிடைத்தாலும் கூட, சந்தையில் விலை குறைந்தால் இலாபம் கிடைப்பது கடினமாகி விடும். ஆகையால் மகசூலை அதிகப்படுத்துவதில் மட்டுமே விவசாயிகள் கவனம் செலுத்தாமல், விளைபொருள்களை பாதுகாப்பாக சேமிக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியும்‌. இதனால் நிச்சயமாக அதிக இலாபம் ஈட்ட முடியும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT