விளையாட்டு

RR vs DC: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒற்றைத் தூணாக விளங்கிய ரியான் பராக்!

பாரதி

நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்ததால் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழ்ந்து சரிவைச் சந்தித்தது. 10 ஓவர் வரையிலுமே போட்டி அவ்வாறுதான் சென்றது. 10 ஓவரில் வெறும் 57 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி அடித்திருந்தது.

ஆகையால் ஆட்டம் டெல்லி பக்கம் சாய்கிறது என்று எண்ணும் சமயத்தில் ரியான் பராக் பேட்டிங்கில் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அணியைச் சரிவிலிருந்து காப்பாற்றினார். குறிப்பாக இவர் கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாக டவுன் ஆடரில் விளையாடி வந்த ரியான் பராக் இம்முறை முதல் 4 பேட்ஸ்மேன்களின் வரிசையில் களமிறக்கப்பட்டார்.

ஆகையால் வெறும் 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 128 ரன்களை குவித்தது. ஆகையால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளுக்கு 185 ரன்களை எடுத்தது.

அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி முதலில் சிறப்பாக விளையாடியது. வார்னர் 34 பந்துகளில் 49 ரன்களை எடுத்து அரைசதத்தைத் தவறவிட்டார். அதேபோல் ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்டும் 26 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். டெல்லி அணி இலக்கை அடைய சிறப்பாக முயற்சித்துதான் வந்தது என்றாலும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இதுகுறித்து ரியான் பராக் ஆட்டம் முடிந்தவுடன் பேசியதாவது, ”கடந்த சில ஆண்டுகளாகவே நான் தீவிர பயிற்சியில் இருந்து வந்தேன். நார்கியா போன்ற அதீத வேகத்தில் பந்துவீசுபவர்களின் வேகத்தை எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி பெற்று வந்தேன். ஆகையால்தான் கடைசி ஒவரில் இரு திசைகளில் பந்து போடும்போது இரு திசைகளிலுமே விளாசினேன். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று ஆட சொன்னார். சில ஆண்டுகளாகக் கடினமாக உழைத்ததன் பலன் இப்போது கிடைத்துள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT