SA Vs IND: 1st test Match. 
விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாதிக்குமா இந்தியா?

ஜெ.ராகவன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி (பாக்ஸிங் டே) இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் ஆமதாபாதில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆடவர் உலகக்கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில் ரோஹித், கோலி, பும்ரா ஆகிய மூன்று முன்னிலை ஆட்டக்காரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஒருநாள் போட்டி, மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த இந்த மூவரும் டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் டி20 போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. மழையால் ஒரு போட்டி ரத்தானது. அடுத்து ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை ஏற்கிறார். இதற்கு முன்னதாக 7 பேர் கேப்டன் பொறுப்பில் இருந்த போதிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. இந்த தொடரில் ரோஹித் தலைமையில் இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதிலும் இந்தியா நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்காவில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதிலும் 7 போட்டிகளில் தோற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒருமுறைகூட இந்தியா வென்றதில்லை. இப்போது இந்தியா தொடரை கைப்பற்றினால், அது உலக கோப்பை போட்டியில் தோற்றதை ஈடுசெய்வதாக இருக்கும். நம்மிடம் திறமை இருக்கிறது. நாம் இன்னும் கவனம் செலுத்தி ஆடினால், கடினமாக உழைத்தால் வெற்றி சாத்தியம்தான்” என்கிறார் ரோஹித்.

இதனிடையே தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “எங்கள் நாட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை நாங்கள் வென்றிருப்பது உண்மைதான். ஆனால், கேப்டன் ரோஹித் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்வது எங்களுக்கு சவாலாகவே இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ரோஹித், கோலி, பும்ரா போன்ற அனுபவம் வாய்ந்த வீர்ர்களும், ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற இளம் ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகேஷ்குமார், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT