விளையாட்டு

வெள்ளரிக்காய் தோலில் இத்தனை நன்மைகளா?

ஆர்.ஜெயலட்சுமி

வெள்ளரிக்காய் தோல்களும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், வெள்ளரிக்காய் தோலை இனி குப்பையில் போடுவதற்கு பதிலாக இப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம்.

கோடையில் வெள்ளரிக்காயை சாலட்டாகவும், சில சமயங்களில் சிற்றுண்டியாகவும் சாப்பிடுவார்கள். வெள்ளரியில் நன்மை பயக்கும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

வெள்ளரிக்காய் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான நன்மைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அதன் சுவை கசக்கும் என்பதால் நேரடியாக உட்கொள்ள பலருக்கும் பிடிக்காது. எனவே அதற்கு மாற்று வழியாக இப்படி செய்து சாப்பிடலாம். இது உணவின் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெள்ளரி தோலின் நன்மைகள் : உண்மையில், வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேபோல் அதன் தோலில் பல வகையான வைட்ட மின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்தும் இதில் ஏராளமாக உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வயிற்றுப் பிரச்சனைகளை நீக்குவதுடன், கண்பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது. அந்த வகையில், வெள்ளரிக்காய் தோலை சமையல் குறிப்புகளில் பயன்படுத்தினால், பல வகைகளில் நன்மை கிடைக்கும்.


காரமான சட்னி செய்யுங்கள் : வெள்ளரிக்காய் தோலில், நீங்கள் கார சட்னி செய்யலாம். இதற்காக, ஒரு கிண்ணத்தில் வெள்ளரி தோல்களை சீவிக்கொள்ளுங்கள். இப்போது அரை கப் புதினா இலைகள், அரை கப் வெள்ளரி, அரை கப் வெள்ளரி தோல், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது அதை ஒரு பாத்திரத்தில் வழித்து வைக்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து கலந்துவிடுங்கள். நீங்கள் விரும்பினால், அதனுடன் நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டும் சேர்க்கலாம். அவ்வளவுதான் உங்கள் சுவையான சட்னி தயார். இதை ரொட்டி, சாதம், பரோட்டாவுடன் சாப்பிடலாம்.

வெள்ளரி பீல் சிப்ஸ் : வீட்டிலேயே எளிதான முறையில் வெள்ளரிக்காய் தோலில் சிப்ஸ் செய்யலாம். இதற்கு, வெள்ளரிக்காய் தோல் சீவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை எண்ணெயில் மொறுமொறுப்பாகும் வரை சிவக்க வறுக்கவும். ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவி சிப்ஸாக சாப்பிடலாம்.

தோல் பராமரிப்புக்காக : வெள்ளரிக்காய் தோலில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. மிக்ஸியில் வெள்ளரி தோல்களை அரைக்கவும், விரும்பினால் தயிர் கொஞ்சம் சேர்த்து அரைக்கலாம். இப்போது அதை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இப்போது உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT