Virat and Rohit 
விளையாட்டு

வெற்றி ஒன்றும் கடைகளில் கிடைப்பதில்லை, அது உழைப்பால் பெறுவது – விராட் கோலியை பாராட்டிய ரோகித்!

பாரதி

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் உலகில் தடம் பதித்து 16 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரோகித் ஷர்மா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி களமிறங்கி தனது சர்வதேச பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர், சச்சின் பிறகு அதிக ரன்கள் அடித்த வீரர் போன்ற பல சாதனைகளை விராட் கோலி படைத்திருக்கிறார். எம்ஸ்.தோனி இந்திய கேப்டன் பதவியிலிருந்து விலகியப்பின் விராட் கோலி ரசிகர்களுக்கும் ரோகித் ரசிகர்களுக்கும் மிகபோரிய போட்டியே நடந்தது. இருவரும் ஒரே அணியில் களத்தில் இறங்கினாலும், எதோ நேருக்கு நேர் மோதுவது போல் ரசிகர்கள் போட்டிப்போட்டுக் கொள்வர்.

ஆகையால், இருவரும் மாறி மாறி கேப்டன்ஸி செய்யும் சூழல் வந்தது. இதற்கிடையே தற்போது விராட்கோலி சர்வதேச விளையாட்டில் களமிறங்கி 16 ஆண்டுகள் ஆகியுள்ளன.

இதற்கு ரோகித் விராட் கோலியை பாராட்டியுள்ளார். “விராட்கோலி உத்வேகம் உள்ள வீரர். நீங்கள் எப்போது விராட் கோலியை பார்த்தாலும் அவர் களத்தில் ஒரு விதமான சக்தியை கொண்டு வருவார். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி வந்த இவர், இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். வெற்றி என்பது கடையில் வாங்குவதில்லை, இது தொடர் உழைப்பின்மூலம் கிடைப்பது.

அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதெல்லாம் கோலியை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் அவருடைய கிரிக்கெட் வேறு ஒரு லெவலில் இருக்கின்றது என்று ரோகித் சர்மா பாராட்டுகிறார். சாம்பியன்ஸ் தொடரிலும் விராட்கோலி இந்திய அணிக்காக முக்கிய பங்கு வகிப்பார்.” என்று பாராட்டியிருக்கிறார்.

அப்போது எப்படி இருந்திருந்தாலும், இப்போது இருவரும் சேர்ந்து களத்தில் இறங்கினால், ரசிகர்களின் மனதில், “நீயும் நானும் வேற இல்லடா.. ரெண்டு பேரும் ஒத்த உசுருடா” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறதாம்.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT