T20 world cup indian team 
விளையாட்டு

T20 உலக கோப்பை கிரிக்கெட் - இறுதி ஆட்டம்..!

வாசுதேவன்

எதிர் பார்த்தபடி இந்திய அணி இறுதி ஆட்டத்தில் அடி வைத்து விட்டது. அவர்களது திறமை மிக்க ஆட்டங்களின் வெளிப்பாட்டுக்களுக்கு கிடைத்த பரிசு இது.

இறுதி ஆட்டத்திலும் இந்த கூட்டு முயற்சி சாதிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம்.

இரண்டு விஷயங்கள் இடையில் வராமல் இருந்தால், வெற்றி நிச்சயம் இந்திய அணிக்கு தான்.

ஒன்று மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை மழை குறிக்கிட்டு அதனால் DLS முறையில் ஆட்டத்தின் ரிசல்ட் முடிவு செய்யப் பட்டால், எந்த அணிக்கு சாதகமாக அமையும் என்று கணிப்பது கடினமானது. சாதாரண நேரங்களில் ஆட்டத்தின் போக்கை வைத்து ஒரு மாதிரி எந்த அணி வெற்றி பெறும் என்று கூறமுடியும். மழை வந்தால் முடிவு செய்யப் போவது DLS ஆக இருந்தால் யார் கோப்பை வெல்லுவார்கள் என்று அந்த தருணத்தின் கையில் உள்ளது.

இரண்டாவது இது வரையில் எல்லாம் ஏறுமுகமாக உள்ள வளைவிற்கு (raising curve) இயற்கை நியதி படி இறங்கு முகம் தொடங்க கூடாது (on account of setting in fatique at the crucial juncture) ஆட்டங்களிலும் வெற்றி மேல் வெற்றிகளாக குவித்துள்ள அணிக்கு முக்கியமான கட்டத்தில் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக தடங்கல் வரக்கூடாது.

இவை இரண்டும் இல்லாவிட்டால் , இந்திய அணி வெற்றி அடைவது மிக்க பிரகாசமாக உள்ளது.

முதல் முறையயாக இந்த வகை புகழ் பெற்ற போட்டியில் இறுதி ஆட்டத்தில் பங்கு பெறப் போகும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கோப்பையை வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஏற்படும் அழுத்தம் மற்றும் பதட்டம் அவர்களுக்கு தடையாக அமையக் கூடும். இருந்தும் அந்த அணி இறுதி ஆட்டத்திற்கு தேவையான தயார் நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

ஆகவே இறுதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடப் போவதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

விராட் கோலி , கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டிற்க்கு அளிப்பதுடன் அடித்தளம் அமைப்பார் என்ற பலரின் எதிர் பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புவோம். அத்தகைய அடித்தளம், அடுத்து வரும் வீரர்கள் அனாவசிய அழுத்தம் இல்லாமல் ஆடி அதிக ரன்களை விரைவில் சேர்க்க உதவும். ரிஷப் பந்த், சூர்ய குமார் யாதவ் போன்றவர்களும் மற்ற வீரர்களும் தங்கள் பங்களிப்பை அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய மிக முக்கிய தருணம். பவுலர்கள் அவர்கள் பணியை கச்சிதமாக செய்யும் திறமை மிக்கவர்கள்.

இறுதி ஆட்டத்தில் விளையாடப் போகும் ஒவ்வொரு தென் ஆப்பிரிக்கா வீரர்களும், தங்கள் கடமையை உணர்ந்து ஆடி இந்திய அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க தயார் நிலையில்தான் இருக்கிறார்கள்.

ஆட்டம் துவங்குவதற்கு முன்பு கணிப்பு இந்திய, தென் ஆப்பிரிக அணிகளுக்கு 55% : 45% என்ற நிலையில் உள்ளது, இந்திய அணிக்கு சாதகமாக.

பெற்றோரின் விவாகரத்து, குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் தெரியுமா? 

'ஹாட்ஸ்பாட்', 'எண்டமிக்' என்பது என்ன தெரியுமா?

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? - ஒரு விரிவான ஆய்வு! 

வித்தியாசமான நான்கு சூப் வகைகள்!

நினைவுத்திறனை கூர்மையாக்கும் 7 பயிற்சிகள்!

SCROLL FOR NEXT