T20 indian cricket team 
விளையாட்டு

புறப்பட்டது இந்திய அணி! T20 உலக கோப்பை வெல்லுமா?

வாசுதேவன்

இனி முக்கியத்துவம்

ஐ பி எல் லில் இருந்து உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு ஷிப்ட் ஆகிவிடும். ஆகிவிட்டது என்றே சொல்லலாம்!

இந்த வருட T 20 உலக கோப்பையை வெல்ல, இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு. நமது இந்திய அணியின் நிறை, குறைகள் பற்றி ஒர் அலசல்.

  • பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளிலும் பங்களிப்பு அளிக்க கூடிய திறமையான வீரர்கள் இருப்பது நமது அணியின் பலம்.

  • கேப்டன் ரோஹித் ஷர்மா அனுபவம் கை கொடுக்கும். மேலும் அவர் துவக்க வீரராக இறங்குவது சிறப்பு.

  • அனுபவம் மிக்க விராத் கோலி எவ்வளவு நேரம் மைதானத்தில் நின்று பேட்டிங் செய்கிறாரோ அது நமது அணிக்கு நன்மையையும், எதிராணியினருக்கு தலை வலியினையும், அழுத்தத்தையும் கட்டாயம் அளிக்கும்.

  • சூர்யா குமார் யாதவ், ஹார்த்திக் பாண்டியா, ரிஷப் பந்த் இவர்களின் அதிரடி ஆட்டங்கள் கை கொடுக்கும்.

  • ஜெய்ஸ்வால், துபே போன்றவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

  • அவருடைய அனுபவம், திறமை இவற்றை முழுவதும் உபயோகிக்க ஜடேஜாவிற்கு நல்ல சந்தர்ப்பம்.

  • பவுலர்களில் பும்பரா, குல்தீப் யாதவ் இருவரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை. சிராஜ் எப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டு வீசுவார் என்பதைப் பொறுத்தது, அவரது பங்களிப்பு.

  • சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், சஹல், அர்ஷ் தீப் சிங் ஆகியோர் எல்லா முக்கிய மேட்ச்சுகளில் பங்கு பெறுவார்களா என்பது கேள்வி குறி. ரிசர்வ் வீரர்கள் ஆட சந்தர்ப்பம் கிடைப்பதை பொறுத்து இருக்கு அவர்கள் பங்களிப்பு.

எல்லா வீரர்களுக்கும் குறைகள் உள்ளன. எதிரணியினர் இன்று இருக்கும் அட்வான்ஸ்ட் டெக்னாலாஜி உதவியுடன் , அவைகளை நன்கு அறிவார்கள். அதற்கு தக்க மாதிரி தயார் செய்து வருவார்கள்.

  • நமது சிறந்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் முக்கியமாக விராத் கோலிக்கு இரண்டு ஸ்லிப் பீல்டர்கள் இருந்தால், எல்லா சமயங்களிலும் சரிவர ஆட முடியாது. அவுட் சைடு தி ஆப் ஸ்டம்ப் மற்றும் வெளியே செல்லும் பந்துக்கள் இவர்களது வீக்னஸ்.

  • சூர்ய குமார் யாதவின் பலம், பலவீனம் இரண்டும் அதிரடி ஆட்டம் மற்றும் புது வகை ஷாட்டுக்களை முயற்சி செய்வது. பதட்டத்தோடு ஆடும் பொழுது பல முறை விக்கெடுக்கள் இழந்துள்ளார்.

  • ஹார்த்திக் பாண்டியா பவுலிங் எப்படி செய்ய போகிறாரோ. சமீபத்திய ஐ பி எல் கசப்பு அனுபவங்கள் இந்த T 20 உலக கோப்பை ஆட்டங்களில் அவரது பேட்டிங் பங்களிப்பிற்கு தடங்கலாக மாறினாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. அதுவே அவரது பலவீனமாக செயல் படலாம்.

  • ரிஷப் பந்த் அடிக்கிற வரை சரி , நின்று ஆடாவிட்டால் அணியின் ஸ்கோர் பாதிக்கப் படும். பும்ரா சிறந்த பவுலர். கட்டுக் கோப்புடன் வீசா விட்டால், அதிக ரன்கள் விட்டுக் கொடுக்க வாய்ப்புகள் உண்டு. சிராஜ் தனது ஆக்ரோஷத்தை கட்டுப் படுத்தவேண்டும். அதுவே அவரது குறை. ஸ்பின் பவுலர்கள் துல்லியமாக பந்துக்கள் வீசி ரன்களை கட்டுப் படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை.

  • முக்கியமாக உபரி ரன்களை குறைக்க வேண்டியது பவுலர்கள், விக்கெட் கீப்பர் மற்றும் பீல்டர்களின் தலையாய கடமை. இந்த ஏரியாவில் நமது அணி வீரர்கள் மேம்படுத்த (to improve further) தேவை அதிகமாக உள்ளது. விக்கெட்டுக்கள் வீழ்த்துவதுடன், எதிரணியினரின் ரன்களை கட்டுப் படுத்தவது மிக மிக முக்கியம்.

விளையாடும் எல்லா வீரர்களும் ஒற்றுமையுடன், குழுவாக செயல்பட வேண்டியது அவர்களது தலையாய கடமை என்பதை உணர்ந்து ஆட வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT