India Vs Pakistan 
விளையாட்டு

இந்திய அணி பாகிஸ்தான் வரக்கூடாது… மீறி வந்தால்…! - பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

பாரதி

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் வைக்க வேண்டும் என்றும், இந்திய அணி இங்கு வரக்கூடாது என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கனேரியா கூறியுள்ளார்.

இந்தமுறை ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை எடுத்து நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகள் நடத்தும் மைதானத்திற்கான இடங்களை இறுதி செய்தது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும். இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த அசாதாரண சூழலை புரிந்துக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் இந்தியாவிலேயே நடத்தலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. இதனால், இந்திய அணியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேபோல் வீரர்களும் அழுத்தம் இல்லாமல் விளையாடுவார்கள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா என்பது குறித்த இறுதி முடிவு, பிசிசிஐயை விட இந்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் கனேரியா பேசுகையில், “பாகிஸ்தான் இருக்கும் இந்த சூழலில் இந்திய வீரர்கள் இங்கு வரவே கூடாது. இதனை பாகிஸ்தான் அரசும் சிந்தித்தாக வேண்டும். இந்திய வீரர்களின் பாதுகாப்பு, மரியாதை ஆகியவை மிகவும் முக்கியம். ஆகையால் ஹைப்ரிட் முறையில் போட்டி நடத்த வேண்டும். இந்திய அணி போட்டியை மட்டும் துபாயில் நடத்தினால் நல்லது. என்னை பொறுத்தவரை பிசிசிஐ இந்த விவகாரத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எனக்கு தெரிந்த வரை, சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலிலேயே நடக்கும். அதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும் பட்சத்தில், அதிகப்படியான பணம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கிடைக்கும். ஆனால், பாகிஸ்தானில் உள்ள பிரச்னைகளையும், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள பிரச்னைகளையும் சரி செய்யாமல், இந்திய வீரர்களை அழைக்கக்கூடாது. ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் வந்தால், வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை.” என்று பேசியுள்ளார்.

ஒரு பாகிஸ்தான் வீரரே இப்படி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.


உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT