Indian Players 
விளையாட்டு

ஆரம்பமானது பாரா ஒலிம்பிக்… 15 இந்தியர்கள் செல்லமுடியாமல் தவிப்பு!

பாரதி

28ம் தேதி முதல் பாரா ஒலிம்பிக் தொடர் ஃப்ரான்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இந்திய நேரப்படி நேற்று தொடங்கிய நிலையில், 15 இந்தியர்களுக்கு அந்த நாடு விசா தர மறுத்ததால், அங்கு செல்ல முடியாமல் தவித்து  வருகின்றனர்.

பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியாவிலிருந்து 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 15 பேர் தங்களுக்கு விசா வேண்டுமென்று விசா கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருக்கின்றனர்.

ஆனால், டெல்லியில் உள்ள ஃப்ரான்ஸ் நாட்டு தூதரகம் விசா தர மறுத்திவிட்டது. அதாவது கடந்த 25ம் தேதியே பாரிஸ் செல்ல வேண்டும் என்பதற்காக, அந்த வீரர்கள் முன்பே விண்ணப்பம் அளித்துள்ளனர். அப்போது சுமார் 25 பேருக்கு விசா வேண்டி விண்ணப்பம் அனுப்பப்பட்டது. ஆனால், அதில் வெரும் 10 பேருக்கு மட்டுமே விசா கிடைத்தது. மீதமுள்ள 15 பேருக்கு விசா வழங்கப்படவில்லை. கிடைத்தவர்கள் 24 மற்றும் 25ம் தேதிகளிலேயே பாரீஸ் சென்றுவிட்டனர். விசா கிடைக்காத 15 பேருக்கு ஏன் விசா தர மறுக்கப்பட்டது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த 15 பேருக்கு விசா ஏன் வழங்கப்படவில்லை என்று கேட்கப்பட்டதற்கு இந்திய பாரா ஒலிம்பிக் நிர்வாகியான மகாஜன் ஓபராய் விசா கிடைக்காதவர்களுக்கும் தங்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டிய வீரர்கள் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பாரிஸ் வந்துவிட்டனர். ஆனால், இதில் 15 பேர் மட்டும் ஏன் வரவில்லை என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று பேசினார்.

அந்த 15 பேரில் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் உறுப்பினரான மருத்துவ நிபுணரான மேத்யு என்பவரும் அடங்கும். பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அங்கீகரித்தவரின் பெயரில் மேத்யூ இடம்பெறவில்லை.

அப்படியிருக்கும்போது, பாரா ஒலிம்பிக் செல்பவர்களின் லிஸ்ட்டில் இல்லாதவருக்கு விசா கேட்டு கடிதம் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT