விளையாட்டு

டிஎன்பிஎல் இறுதிப் போட்டி: கோப்பையை வெல்லப்போவது கோவையா? நெல்லையா?

கல்கி டெஸ்க்

மிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி டிஎன்பிஎல் 7வது சீசன் தொடங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு அணிகள் இடம் பெற்றிருந்தன. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்தப் போட்டிகளின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வந்திருக்கின்றன.

டிஎன்பிஎல் 7வது சீசனின் இறுதிப் போட்டி இன்று இரவு 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க இருக்கிறது. திருநெல்வேலி, இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய நான்கு போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணி 3 முறையும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ், லீக் ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி, ஏழில் ஆறில் வெற்றி பெற்று, குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல், நெல்லை ராயல் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றின் இரண்டு பரபரப்பான போட்டிகளில் வெற்றி பெற்றது. எலிமினேட்டரில், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதன்பின் குவாலிஃபையர்-2ல், டிராகன்ஸுக்கு எதிராக பெரிய ஸ்கோரைத் துரத்தும்போது ஒரு கட்டத்தில் பெரும் சிக்கலில் சிக்கிய அணி கடைசி பந்தில் ஆட்டத்தை சீல் செய்தது.

கோவை அணியில் சுஜய், சுரேஷ்குமார் (விக்கெட் கீப்பர்), சச்சின், முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யு.ஆர்.ரஹ்மான், முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன், யுதீஸ்வரன், கௌதம் தாமரைக் கண்ணன், கிரண் ஆகாஷ், திவாகர், ஹேம்சரண், ஓம் பிரகாஷ், வித்யுத் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அதேபோல் நெல்லை அணியில், அருண் கார்த்திக் (கேப்டன்), சுகேந்திரன், அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், ஹரிஷ், பொய்யாமொழி, மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின், ஆதித்யா அருண், மிதுன், வீரமணி, ஸ்ரீ நெரஞ்சன், லட்சுமி நாராயணன் விக்னேஷ், கார்த்திக் மணிகண்டன், அருண் குமார், இம்மானுவேல் செரியன், கபிலன், அஸ்வின் கிறிஸ்ட் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்த இரண்டு அணிகளும் மிகப்பெரும் சவால்களைச் சந்தித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால் இன்று இரவு நடைபெறும் கடைசி ஆட்டத்திலும் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது என்றே கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா… தமிழ் ரசிகர்கள பிடிச்சுட்டாருங்க!

SCROLL FOR NEXT