விளையாட்டு

விழித்திரு நோயை தடுத்திடு!

விழிப்புணர்வு:

வாசகர்கள்

-கவிஞர் ச. ராஜ்குமார்

ங்கு காணினும் நெகிழி பைகள். சாலையை கடக்கையில் சாக்கடை நாற்றம் வீதியெங்கும் தெருநாய்கள் கூட்டம்.

நம் நாட்டில் நெகிழி பையை காட்டிலும் அதிகம் நம் கண்களில் தென்படுவது இந்த நாப்கீன்கள்தான்.

நான் இப்போது எதை பற்றி பேசபோகிறேன் என்பது உங்களுக்கு நன்றாகவே புரியும் என்று நினைக்கிறேன் .நாப்கீன்“ பற்றித்தான் பேசப் போகிறேன்.

நம் இந்தியாவில்  “பிளாஸ்டிக் கவர்கள்“ பேப்பர்கள், மக்காத பொருள்கள் இதையும் தாண்டி அதிகமாக மக்கள் உபயோகிப்பது இந்த நாப்கீன்கள் தான்.

     நேற்று பிறந்த குழந்தைகள் முதல் பருவமடைந்த  பெண்கள் முதற்கொண்டு, நாளை இறக்க இருக்கும் வயது முதிர்ந்தவர்கள் வரை  நாப்கீன் பயன்படுத்துவோர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. நாப்கீன் பயன்படுத்து பவர்கள் எல்லோருக்கும் நாப்கீனை பயன்படுத்தும் முறையும் அதனால் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கிறார்களா இல்லையா என்பது பற்றி தெரியாது. ஆனால் இது பற்றி எல்லோரும் கட்டாயம்  தெரிந்துக்கொள்ளவேண்டியது அவசியம் .

சாதரணமாக நம் எல்லோரும் நாப்கீனை பயன்படுத்தி விட்டு ஒரு கருப்பு கவரில் கட்டி சாலையோரத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விடுகிறோம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் எந்த தாய்மார்களுக்கும் கவலை இல்லை.

சாலையோரம் வீசிய நாப்கீன்களை தெருநாய்கள் இழுத்து சென்று பிய்த்து தெருவெங்கும் சிதறிக் கிடக்கிறது. இதனால் பல நோய்கள் பரவும் வாய்ப்பு இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் நம் பிள்ளைகள் எல்லோரும் அதே சாலையில்தான் செல்கிறோம் என்பதை ஏன் இவர்கள்  புரிந்து கொள்வதில்லை.

தினம்தோறும் நாப்கீன்களை  அள்ளிச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் பற்றிய கவலை கொஞ்சம் கூட இவர் களுக்கு இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

  ஏன் இந்த அலட்சியம்? குப்பைகளை அள்ளிச் செல்வது துப்புரவு பணியாளர்கள்தானே அவர்கள் யாரோ தானே நமக்கென்ன என்ற அலட்சியமா.? அதில் வேலை செய்பவர்கள் நம் பிள்ளைகளோடு பயிலும் பிள்ளைகளின் யாரோ ஒருவருடைய அம்மாவாக... அப்பாவாகக் கூட இருக்கலாம் ஏன் நம் பக்கத்து வீட்டு பெரியோர்களாகக் கூட இருக்கலாம். அவர்களைப் பற்றியும் கொஞ்சம் நினைக்கலாமே.

நாம் சுத்தமாகத்தான் இருக்கிறோம் அதனால் எந்த நோயும் வராது என்ற அலட்சியமா? உங்களுடைய அலட்சியத்தை இதில் காட்டாதீர்கள். நாப்கீன்களை முறையாக பயன்படுத்திவிட்டு குப்பைத்தொட்டியில் போடுங்கள். அல்லது குப்பையை ஏற்றி செல்லும் குப்பை வாகனத்தில் போடவும்.

உங்கள் தெருவில் குப்பை தொட்டிகள் இல்லையா துப்புரவு பணியாளர்கள் வேலை செய்யவில்லையா அதற்கும் சில வழிமுறைகள் இருக்கிறது அதை அறிந்து செயல்படுங்கள்.

இந்த சமுதாயத்தில் வாழ்வது நாம் மட்டுமல்ல நம்மை போன்று மற்ற மனிதர்களும் உயிரினங்களும்தான் ...!!

          உயிரை நேசிப்போம் மனிதம் வளர்ப்போம் ..

          விழிப்போடு இருப்போம்

          நோய் வராமல் தடுப்போம்

           நம்மை நாமே காப்போம்..!!

“வந்தபின் வாடுவதைவிட வரும் முன்னே காப்பதே  மேல்“

என்னும் பழமொழிக்கேற்ப வாழ்ந்திடுவோம் ....!! 

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT