நவீன காலத்தில் உணவு பழக்கங்கள் அனைத்துமே மாறிவிட்டது. யாரும் சாப்பாட்டை கவனமுடன் சாப்பிடுவதே இல்லை. முந்தைய காலங்களில் இரவு இந்த உணவு சாப்பிடக்கூடாது, காலை இதை தான் சாப்பிட வேண்டும் என டைம்டேபிள் போட்டு சாப்பிட்டு வந்தார்கள். அதுவும் சோறு, களி, நவதானியங்கள் என சத்தான உணவு பட்டியல் தான்.
ஆனால் நாம் சத்தான பொருட்களையும் சாப்பிடாமல், சரியான நேரத்திற்கும் சாப்பிடாமல் உடலை கெடுத்து வருகிறோம். சாப்பிடும் போது நாம் இதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.,. அது என்ன என்னவென்றால் உணவு சேர்க்கைகள் தான். அதாவது எந்த உணவுடன் எதை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒட்டாத இரு உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால் அது பல விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒன்றிணையாத, இணைக்க கூடாத உணவு பட்டியலை பார்க்கலாம்.
பாலுடன் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
உணவுடன் அதிக தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போக செய்யலாம். இது செரிமானத்தை மெதுவாக்கும், அஜீரணத்தை ஏற்படுத்தும்.
பலருக்கும் தயிர் வெங்காயம் மிகவும் பிடிக்கும். ஆனால் தயிர் மற்றும் வெங்காயத்தின் சேர்க்கை சொரி, அரிப்பு, தோலழற்சி போன்ற பிரச்சனைகளை கொடுக்கும்.
நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பழம் மற்றும் புரதம் நிறைந்த பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
கேரட்டுடன் ஆரஞ்சுகளை உட்கொணால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
இறைச்சியும், சீஸும் சேர்ந்து சாப்பிட்டால் ஜீரணிப்பது மிகவும் கடினம்
பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை மற்றும் வாயு ஏற்படலாம்
நீங்கள் வாழைப்பழம் மற்றும் கொய்யா இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் வீக்கம், வாயு மற்றும் தலைவலி போன்ற அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஆட்டிறைச்சி மற்றும் இறால் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது. ஒன்றாக உட்கொள்ளும் போது அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
குளிர்பானங்களுடன் சீஸ் உணவுகளை சாப்பிடுவது வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.