Badminton Img Credit: Freepik
விளையாட்டு

இந்தியாவிற்கு பேட்மிண்டன் அறிமுகம் செய்தது யார்? - பேட்மிண்டன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

பாரதி

ஷட்டில்காக் அல்லது பேட்மிண்டன் என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டு இருவர் அல்லது நான்கு நபர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் மைதானத்திற்கு நடுவில் ஒரு வலைக் கட்டப்பட்டிருக்கும், இரு அணிகளும் மட்டையைப் பயன்படுத்தி இறகுப்பந்தை முன்னும் பின்னும் அடிப்பதுதான் விளையாட்டு. வலையைத்தாண்டி செல்லும் இறகுப்பந்தை எதிரணி கீழே விழாமல் அடிக்க வேண்டும். இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் 'பேட்மிண்டன்' என்று அழைப்பார்கள். இப்போட்டி பெரும்பாலும் அரங்கத்தினுள் தான் விளையாடுவார்கள். காற்று விளையாட்டின் போக்கை மாற்றிவிடும் காரணத்தினால் வெளியில் விளையாடுவதை தவிர்த்துவிடுவார்கள்.

வரலாறு:

இவ்விளையாட்டை 1873ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லார்ட் ப்யூபர்ட் கிராமப்பகுதியில் உள்ள பேட்மிண்டன் என்ற கிராமத்தில்தான் கண்டுபிடித்தனர். இந்த ஷட்டில்காக் விளையாட்டை இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்தான்அறிமுகம் செய்தனர். ஆகையால் தான் இந்த விளையாட்டுக்கு ஆங்கிலத்தின் பேட்மிண்டன் என்று பெயர் வந்தது. இந்த விளையாட்டை 1860 ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார்கள்.

1899ம் ஆண்டு ஆண்களுக்கான முதல் அதிகாரப்பூர்வமற்ற இங்கிலாந்து பேட்மிண்டன் சேம்பியன்ஷீப் நடைபெற்றது. அடுத்த ஆண்டே பெண்களுக்கும் நடைபெற்றது.

பின்னர் 1934ம் ஆண்டுத்தான் முதன்முதலில் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு உருவானது. முதன் முதலில் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பாக 1977ம் ஆண்டு பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது. இங்கிலாந்தை அடுத்து மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், டென்மார்க் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. ஒலிம்பிக்கில் 1988ம் ஆண்டுத் தான் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

அதுவரை இருவர் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த பேட்மிண்டனில் 1996ம் ஆண்டு ஒரு அணிக்கு இரு நபர்கள் என்ற முறையை அறிமுகப்படுத்தினர்.

இறகுப்பந்து மற்றும் மட்டை:

இறகுப்பந்தில் மொத்தம் 14 முதல் 16 வரை இறகுகள் உள்ளன. பந்தில் கீழ் உள்ள வட்ட வடிவம் கொண்டது 1 முதல் 1.1/8 அங்குலம் மேலே உள்ள நீளம் 2 ½ முதல் 2 ¾ அங்குலம் வரை இருக்கும். இறகுப்பந்தின் முழு எடை 4.73 கிராம் முதல் 5.50 கிராம் இருக்கும். முதலில் இயற்கை இறகுகளை பயன்படுத்தினர். பின்னர் நைலானால் செய்யப்பட்ட இறகுபந்தை பயன்படுத்தத் தொடங்கினர்.

மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரை இருக்கும். மட்டையின் விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரை இருக்கும்.

ஆடுகளம்:

ஒற்றையர் ஆடுகளம்:

இது ஒருவருக்கொருவர் விளையாடும் போட்டி. இப்போட்டியின் ஆடுகளம் 13.40 மீட்டர் மும் 5.18 மீட்டர் அகலம் கொண்டிருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் பந்து விழுவதற்கான எல்லைக் கோடுகள் 1.98 மீட்டர் நீளத்திற்கு இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் பந்து விழுவதற்கான எல்லைக் கோடுகள் 1.98 மீட்டர் நீளத்திற்கு இருக்கும். இப்போட்டியில் வலை தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.

இரட்டையர் ஆடுகளம்:

இது ஒரு அணிக்கு இரண்டு பேர் என நான்கு பேர் விளையாடும் விளையாட்டு. இந்த ஆடுகளம் 13.40 மீட்டர் நீலமும் 6.10 மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் பந்து விழுவதற்கான எல்லைக் கோடுகள் 1.98 மீட்டர் நீளத்திற்கு இருக்கும். அதேபோல் பக்கக்கோடுகள் 46 செ.மீ இருக்க வேண்டும்.

விளையாட்டின் விதிமுறைகள்:

ஒரு ஆட்டத்திற்கு மூன்று போட்டிகள் நடைபெறும். அதில் இரண்டு போட்டிகள் வெற்றிபெறும் அணியே வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும். புள்ளிகல் கணக்கில் எந்த அணி 21 புள்ளிகள் எடுக்கிறதே அதுதான் வெற்றிபெற்ற அணி.

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 2012ம் ஆண்டு சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வாங்கியிருக்கிறார். அதேபோல் பி.வி.சிந்து 2016ம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் 2020ம் ஆண்டு வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கிறார். இதுவரை ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் பெண்களே பதக்கங்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT