velaivaaippu

தமிழக மாணவர்கள் JEE நுழைவுத் தேர்வு எழுதுவதில் சிக்கல்!

கல்கி டெஸ்க்

JEE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் உள்ளீடு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. JEE நுழைவுத் தேர்வுக்கு டிசம்பர் 15 முதல் ஜனவரி 12 வரை மட்டுமே விண்ணப்பத்திற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் JEE முதல்நிலைத் தேர்வு ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெறவும் உள்ளது.

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு கொரோனா சூழலில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். JEE விண்ணப்ப பதிவில் ,தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க கோரி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Anbumani

JEE தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். JEE தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை சில தளர்வுகளை அளித்தால் மட்டுமே, இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என கூறியுள்ளார்.

அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், இது தொடர்பாக (National testing Agency) தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

SCROLL FOR NEXT