பசி என்பது மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. ஆனால், அதிகப்படியான பசி உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதிக்கிறது. இன்றைய வேகமான உலகில் நாம் அடிக்கடி தவறான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். இதனால், பசி அதிகரித்து அதிகமாக உணவு உட்கொண்டு, உடலில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பதிவில் பசியைக் கட்டுப்படுத்த உதவும் 10 எளிய வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். இதைப் பின்பற்றினால் நீங்கள் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும்.
பசியை கட்டுப்படுத்த 10 எளிய வழிகள்:
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். எனவே, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புரதம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். உங்கள் தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய கோழி, மீன், பருப்பு வகைகள், முட்டை போன்ற உணவுகளை உண்ணலாம்.
பல நேரங்களில் பசி என்று நாம் நினைப்பது உண்மையில் தாகமாகதான் இருக்கும். எனவே, தினசரி அதிகமாக தண்ணீர் குடிப்பது முக்கியம்.
மூன்று வேளை அதிகமாக உண்பதற்கு பதிலாக, அதை 5 வேளையாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
மெதுவாக சாப்பிடுவதன் மூலம் உங்கள் மூளைக்கு நீங்கள் நிறைவாக இருக்கிறீர்கள் என்ற சிக்னல் செல்ல போதுமான நேரம் கிடைக்கும். இதனால், பசி விரைவில் தணிந்து அதிகமாக உணவு அருந்துவது தடுக்கப்படும்.
உணவு உண்ணும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்றை நிரப்பி நீங்கள் குறைவாக சாப்பிட உதவும்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து பசியை அதிகரிக்கச் செய்யும். எனவே, இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி உங்கள் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
தினசரி போதுமான தூக்கம் இல்லாமல் இருந்தால் பசி அதிகரிக்கும். எனவே, தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.
மன அழுத்தம், உணவு உண்ணும் பழக்கத்தை பாதிக்கும். மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா, தியானம் போன்ற நுட்பங்களை பயன்படுத்தி பசி எடுக்கும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
பசியைக் கட்டுப்படுத்துவது என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் ஒரு முக்கிய அங்கமாகும். மேற்கண்ட 10 எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதால் நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.