இன்றைய காலத்தில் முறையாக தூங்குவது என்பது பெரும்பாலானோருக்கு அரிய பொக்கிஷமாக மாறிவிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாடு ஆகியவை நம் தூக்கத்தை கடுமையாக பாதிக்கின்றன. இதன் விளைவாக பலர் தூக்கமின்மை, தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். எனவே, இந்தப் பதிவில் விரைவாகத் தூங்க உதவும் 3-2-1 விதியைப் பற்றி பார்க்கலாம்.
3-2-1 விதி என்பது தூக்கத்தை விரைவாக ஏற்படுத்த உதவும் ஒரு எளிய நுட்பமாகும். இது முதலில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நுட்பம் தசை தளர்ச்சி, ஆழ்ந்த சுவாசம் மற்றும் சிந்தனை ஆகிய மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது.
3 நிமிடங்கள்: தூங்கச் செல்லும் போது முதல் மூன்று நிமிடங்கள், உங்கள் படுக்கையில் வசதியாக படுத்துக்கொண்டு உடலின் ஒவ்வொரு தசைகளையும் தளர்த்த வேண்டும். உங்கள் கண்கள், முகம், கழுத்து, தோல் கைகள், வயிறு, தொடைகள், கால்கள் என ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக கவனம் செலுத்தி தளர்த்துங்கள்.
2 நிமிடங்கள்: பின்னர், மெதுவாக ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். உங்கள் சுவாசத்தை கவனித்து ஒவ்வொரு சுவாசத்திலும் உங்கள் உடல் எவ்வாறு தளர்கிறது என்பதை உணர வேண்டும். இதை இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள்.
1 நிமிடம்: இறுதியாக ஒரு அமைதியான காட்சியை மனதில் கற்பனை செய்துகொள்ள வேண்டும். ஒரு அழகான கடற்கரை, அமைதியான காடு அல்லது உங்களுக்குப் பிடித்த அன்பான நிகழ்வு போன்ற எதுவாக இருந்தாலும் அதை நினைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மனதிற்கு ஒரு நிம்மதியைத் தரும்.
இந்த நுட்பம் உங்கள் மனதையும், உடலையும் தளர்வடையச் செய்து தூக்கத்தை விரைவாக ஏற்படுத்த உதவும். இதனால், உங்கள் தூக்கத்தின் தரம் மேம்பட்டு புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க உதவும். தினசரி இந்த நுட்பத்தை பின்பற்றுவதால் மன அழுத்தம் குறைந்து எப்போதும் அமைதியாக உணர்வீர்கள். இந்த நுட்பம் முற்றிலும் இயற்கையானது என்பதால், எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் விரைவாகத் தூங்கலாம்.
3-2-1 விதி உங்களின் தூக்கமின்மை, தூக்கக் குறைவு போன்ற எல்லா பிரச்சனைகளையும் சரி செய்ய உதவியாக இருக்கும். இந்த நுட்பத்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இருப்பினும் நன்றாகத் தூங்குவதற்கு இந்த நுட்பம் மட்டுமே போதாது. இத்துடன் ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மன அழுத்த மேலாண்மை போன்றவை தூக்கத்தை மேம்படுத்த மிகவும் முக்கிய.