தூக்கம் 
ஆரோக்கியம்

படுத்தவுடன் உறக்கம் பெற பருக வேண்டிய 5 வகை பானங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

டுத்தவுடன் உறக்கம் என்பது பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. சிலர் தூக்க மாத்திரை உதவியுடன் தினமும் உறங்குவதுண்டு. வேறு சிலர், ‘படுத்ததும் தூக்கம் வருதா? பல நினைவும் பல மன உளைச்சலும் பாடாய்ப்படுத்துது' எனப் புலம்புவதும் உண்டு. இவற்றையெல்லாம் கடந்து ஆழ்ந்த ஆரோக்கியமான உறக்கம் பெற பருக வேண்டிய 5 வகை பானங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* கெமோமைல் டீ அருந்திவிட்டு உறங்கச் செல்வது உடலைத் தளர்வுற்ற நிலைக்கு கொண்டு சென்று, மனதில் உள்ள கவலைகளை நீக்கி இரவு முழுவதும் அமைதியான தூக்கம் பெற உதவும்.

* சூடான பாலில் ட்ரைப்டோஃபேன் (Tryptophan) என்ற பொருள் உள்ளது. இது தூக்கத்தை வரவழைக்கும். செரோடோனின் (Serotonin) என்ற ஹார்மோனின் உற்பத்தி அளவைப் பெருகச் செய்து அமைதியான, தரமான உறக்கம் பெற வழி வகுக்கும்.

* இயற்கையாகவே டார்ட் செரி ஜூஸில் உள்ள மெலடோனின் என்ற பொருள் உடலின் தூங்கி, எழும் சுழற்சியை (Sleep - wake cycle) ஒழுங்குபடுத்தி, இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை நோயின் அறிகுறிகளைக் குறைத்து, இரவு முழுவதும் நீண்ட நேரம் தூங்கி எழ உதவி புரிகிறது.

* வெலேரியன் ரூட் டீயில் உள்ள ஒரு வகை மயக்கம் தரக்கூடிய குணமானது படுத்தவுடன் கண்கள் செருகி ஆழ்ந்த, அமைதியான உறக்கத்திற்குள் செல்ல உதவுகிறது.

* வெது வெதுப்பான பாலில் மஞ்சள் தூளும் மிளகுத் தூளும் சேர்த்தால் அது கோல்டன் மில்க் என அழைக்கப்படுகிறது. இதில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் உள்ளது. இந்தப் பாலைக் குடித்துவிட்டு படுக்கச் சென்றால் உடல் நன்கு தளர்ச்சியுற்று தூக்கம் உடனே கண்களைத் தழுவும்.

மேலே கூறிய 5 பானங்களில் ஒன்றை குடித்து விட்டு உறங்கச் சென்றால் தூங்காத இரவென்று ஒன்று இருக்கவே இருக்காது.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT