மகிழ்ச்சியான ஜப்பானிய குடும்பம் 
ஆரோக்கியம்

உடலில் ஸ்டெமினா அதிகரிக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் 5 பழக்கங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

டின உழைப்பிற்கும் சுறுசுறுப்பிற்கும் உதாரணமாகத் திகழ்பவர்கள் ஜப்பானியர்கள் என்று கூறினால் அது மிகையல்ல. அவர்களின் உடல் ஸ்டெமினா மற்றும் சகிப்புத்தன்மை அதிகரிக்க, அவர்கள் பின்பற்றும் 5 வகை சிறப்பான பழக்கங்களே அவர்களுக்கு உதவுகின்றன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஸீ வீட் (Sea Weed) எனப்படும் கடல் பாசியை அதிகம் உண்பது. இதில் வைட்டமின் A, C, D, E மற்றும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் உள்ளன. மேலும், இதில் நார்ச்சத்தும் அதிகமுள்ளது.

2. அவர்களின் மைண்ட்ஃபுல் ஈட்டிங் பழக்கமானது, செரிமானம் சிறப்பாக நடைபெறவும், எடை குறைப்பிற்கும், நீண்ட நேரம் ஸ்டெமினாவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. சத்துக்கள் அதிகளவு நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவும் வாய்ப்பளிக்கும்.

3. ஜப்பானியர்களின் தினசரி வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி ஒரு முக்கிய அங்கமாக இருப்பதும் அவர்கள் ஆரோக்கியம் மேம்படவும் ஸ்டெமினா அதிகரிக்கவும் உதவுகிறது.

4. கேட்டச்சின் (Catechin) மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாட்ச்சா (Matcha) என்ற ஒரு வகை பானம் அருந்துவது அவர்களின் வழக்கம். மாட்ச்சா உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் ஸ்டெமினாவின் அளவை தொடர்ந்து உச்ச நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும்.

5. அதிக சுவையும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்த க்ரீன் டீ அருந்துவதாலும் அவர்கள் உடலின் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் இயக்கம் மேம்படுகிறது. மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற்று உடலின் ஸ்டெமினா அளவு அதிகரிக்கவும் க்ரீன் டீ உதவுகிறது.

இவ்வாறான ஜப்பானியர்களின் பழக்கங்களை மற்றவர்களும் பின்பற்றி அதிகளவு ஸ்டெமினாவும் உடல் ஆரோக்கியமும் பெறலாமே!

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT