5 Health Benefits of Pongal 
ஆரோக்கியம்

சூப்பர் ஃபுட் உணவு பொங்கலின் 5 ஆரோக்கிய நன்மைகள்!

ம.வசந்தி

காலை உணவுகளிலேயே மிகச் சிறந்த உணவாக பொங்கல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் ஜீரணிக்க எளிதாக இருப்பதும் நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலை வழங்குவதால் இதை சூப்பர் ஃபுட் உணவு என்று சொல்வதில் தவறில்லை. அரிசிக்கு பதிலாக சிறுதானியங்கள் சேர்த்து பொங்கல் செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

பொங்கலில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, உங்கள் உடலுக்கு நன்மை செய்யும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட சீரான மேக்ரோநியூட்ரியண்ட்கள் உள்ளதால் கிடைக்கும்5 நன்மைகள் குறித்து காண்போம்.

1. செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்: பல பொருட்களை சாப்பிடுவது உடல் சுவர்களை பாதுகாப்பதோடு அதில் ஏற்படும் எரிச்சல் உணர்வைப் போக்கும் என்ற கூற்றை ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதாலும் பொங்கல் இதற்கு பொருந்தி வருவதாலும் மிகவும் லேசான உணவாக இருப்பதாலும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

2. உடலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த உணவு: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கத்தாலும் மற்றும் பிற காரணங்களாலும் உடலில் சேரும் நச்சுக்கள் பொங்கல் சாப்பிடுவதால் வெளியேறுவதால் இது மிகச் சிறந்த காலை உணவான தேர்வுகளில் முதன்மையாக இருக்கிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்: பொங்கல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களை சமநிலைப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், உடலில் உள்ள ஆற்றலை சமன் செய்வதாலும் இது மிகச் சிறந்த உணவாக உள்ளது.

4. உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக உள்ளது: பொங்கலில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் கொடுப்பதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பொங்கல் பயனுள்ளதாக இருக்கும்.

5. சர்க்கரை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பொங்கல்: அரசிக்கு பதிலாக சிறுதானியங்களான, சாமை, வரகரசி, குதிரைவாலி கொண்டு தயாரிக்கப்பட்ட பொங்கலை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தடுக்க உதவி, உடலில் இன்சுலின் அளவை பராமரிக்கிறது இதனால் பொங்கல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகவே கருதப்படுகிறது.

காலை உணவை தவிர்க்காமல் சூப்பர் ஃபுட் உணவான பொங்கலை சாப்பிட்டு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

மலையாளத்தின் மினிமம் கியாரண்டி ஹீரோ யார் தெரியுமா?

நல்ல மரபணுக்களை தூண்ட உதவும் தியானம்!

விமர்சனம்: அமரன் - நிஜத்திலும் நிழலிலும் வென்றிருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன் - சல்யூட் சார்!

எல்லோருக்குமே ஒரே அளவு ஆனந்தம்தான்!

ஆர்.கே.நாராயணனின் புதினங்களில் வரும் 'மால்குடி' எனும் ஊர் எங்கே இருக்கிறது?

SCROLL FOR NEXT