Cancer 
ஆரோக்கியம்

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கிரி கணபதி

சமீப காலமாக நவீன வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றால் பலர் இளம் வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இளம் வயதில் புற்றுநோய் ஏற்படுவதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. எனவே, இளம் வயதிலேயே புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இந்தப் பதிவில் இளம் வயதினரை தாக்கும் புற்று நோய்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.‌

1. லிம்போமா (Lymphoma)

லிம்போமா என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள லிம்பு செல்களில் ஏற்படும் புற்றுநோயாகும். இது இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது: ஹாட்கின்ஸ் லிம்போமா மற்றும் Non-ஹாட்கின்ஸ் லிம்போமா. இளைஞர்களில் Non-ஹாட்கின்ஸ் லிம்போமா அதிகமாக காணப்படுகிறது. லிம்போமாவுக்கு சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், வைரஸ் தொற்று, நோய் எதிர்ப்பு மண்டல கோளாறுகள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

2. டெஸ்டிகுலர் கேன்சர் (Testicular Cancer)

டெஸ்டிகுலர் கேன்ர் ஆண்களின் விதைப்பையில் ஏற்படும் புற்றுநோயாகும். இது பொதுவாக 15 முதல் 35 வயதுடைய ஆண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த புற்றுநோயின் துவக்க கட்டங்களில் எந்தவிதமான அறிகுறிகளும் தென்படாது. ஆனால், விதைப்பையில் வீக்கம், வலி, கனமான உணர்வு போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

3. தைராய்டு கேன்சர் (Thyroid Cancer)

தைராய்டு சுரப்பில் ஏற்படும் இந்த கேன்சர் கேன்சர் பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டு கேன்சரின் ஆரம்ப கட்டங்களில் குரல் மாற்றம், மூச்சு விடுவதில் சிரமம், கழுத்தில் கட்டிகள் போன்றவை தென்படலாம்.

4. எலும்பு புற்றுநோய் (Bone Cancer)

எலும்புகளில் ஏற்படும் புற்றுநோயே எலும்பு புற்றுநோய். இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. எலும்பு வலி, வீக்கம், உடைந்து போதல் போன்றவை எலும்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்.

5. மூளை புற்றுநோய் (Brain Cancer)

மூளையில் ஏற்படும் புற்றுநோய்  மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாகும். தலைவலி, வாந்தி, பார்வை மங்கல், சமநிலை இழப்பு போன்றவை மூளை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்.

என்னதான், புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் என்றாலும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்தால் முற்றிலும் குணமடைய முடியும். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோயை தடுக்கலாம். மேலும், எந்தவிதமான உடல்நல பிரச்சனை ஏற்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT