Tips to get rid of severe abdominal pain during menstruation! Image Credits: HealthyWomen
ஆரோக்கியம்

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைப் போக்க 5 டிப்ஸ்!

நான்சி மலர்

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியை சமாளிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமேயாகும். Mood changes, Bloating, fatigue, food cravings ஆகிய பிரச்னைகளையும் தாண்டி கடும் வயிற்றுவலி ஒவ்வொரு மாதமும் வந்து பெரும் வேதனையை தரும். அந்தப் பிரச்னையை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Apply Heat: மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைப் போக்க சூடான குளியல் போடுவது அல்லது Heating pad போன்றவற்றை வயிற்றுப்பகுதியில் வைத்துக் கொள்வது வலியை சற்றுக் குறைக்கும். இதனால், வலி ஏற்படுத்தும் தசைகள் தளர்வதால் வலி குறையும் என்று சொல்லப்படுகிறது.

2. Pain reliever: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க Non steroidal anti inflammatory drugs நன்றாகப் பயன்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த மருந்து Prostaglandins என்று சொல்லப்படும் வலியை கொடுக்கக்கூடிய சுரபியை குறைப்பதால், விரைவிலேயே வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். Advil, Aleve, Tylenol ஆகிய Pain reliever ஐ பயன்படுத்துவது சிறந்ததாகும்.

3. Exercise: மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியின்போது, 'உடற்பயிற்சி செய்யுங்கள். வலி போய்விடும்' என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம். உடற்பயிற்சி இயற்கையான Pain reliever ஆகும். உடற்பயிற்சி செய்யும்போது Endorphins சுரந்து உடலில் ஏற்படும் வலியை போக்க உதவும். உடற்பயிற்சி செய்வது ஸ்ட்ரெஸ்ஸை கூட போக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. Reduce stress: ஸ்ட்ரெஸ் நம் உடலை பல விதத்தில் பாதிக்கிறது. நம்முடைய உடலில் ஸ்ட்ரெஸ் இருந்தால் வலியை தாங்கக்கூடிய சக்தியைக்கூட அது குறைத்துவிடும். அதனால் யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம், கவுன்சிலிங் போன்றவற்றை செய்து ஸ்ட்ரெஸ்ஸை குறைத்துக்கொள்வது சிறந்ததாகும்.

5. Vitamins and minerals: ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் மாதவிடாய் வலியினை போக்க முடியும். வைட்டமின் பி1 மற்றும் மெக்னீசியம் ஆகியவை மாதவிடாயால் ஏற்படக்கூடிய வயிற்றுவலியை போக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. பருப்பு வகைகள், தானியங்கள், பீன்ஸ், கீரை வகைகள், காலிபிளவர், அவகோடா, ஆரஞ்ச் ஆகியவற்றில் வைட்டமின் பி1 மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. எனவே. வயிற்று வலியை குறைக்க இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கடுமையான மாதவிடாய் வயிற்றுவலியில் இருந்து விடுதலைப் பெறலாம்.

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

SCROLL FOR NEXT