சரும ஆரோக்கியம், ஜீரண பிரச்னை 
ஆரோக்கியம்

சரும ஆரோக்கியத்தையும் ஜீரண மண்டலத்தையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கும் 5 வகை பானங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

மது உடலின் ஒட்டுமொத்த நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, நமது சருமம் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை உண்பதும் உடற்பயிற்சி செய்வதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு சில வகை பானங்களை அருந்துவதும் அவசியமாகிறது.

இவ்வகை பானங்கள் ஆரோக்கியமான சருமத்தைத் தரவும் இரைப்பை குடல் இயக்கங்களை  மேன்மையடையச் செய்யவும் உதவும். இவற்றில் ஊட்டச் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ரோபயோட்டிக்ஸ் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். அந்த வகையான பானங்கள் எவை என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

1. க்ரீன் டீ: க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக கேட்டச்சின்கள் அதிகம். இது தீங்கிழைக்கும், ஃபிரீ ரேடிக்கல்களினால் சரும செல்கள் சிதைவுறுவதைத் தடுத்து சரும ஆரோக்கியம் காக்கும். பாலிபினால்ஸ் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.

2. கோம்புச்சா: நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒரு வகை டீ கோம்புச்சா. இதிலுள்ள அதிகளவு ப்ரோபயோட்டிக்ஸ் இரைப்பை - குடல் பகுதிகளில் வளரும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆரோக்கியமாய் வளர உதவும். கோம்புச்சாவிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி புரியும்.

3. ஆலுவேரா ஜூஸ்: இது இனிமையான அமைதிப்படுத்தும் குணம் கொண்ட ஜூஸ். இதிலுள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப் பசையுடன் வைக்க உதவும். இந்த ஜூஸ் முகத்தில் வரும் பருக்களை நீக்கும். சருமம் மற்றும் குடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்கவும் செய்யும்.

4. எலும்புச் சாறு: இதிலுள்ள அதிகளவு கொலாஜன் சருமத்தின் சுருக்கங்களை நீக்கும். சருமத்தின் எலாஸ்ட்டிசிட்டியைப் பராமரிக்க உதவும். இதிலுள்ள அமினோ ஆசிட் மற்றும் கனிமச் சத்துக்கள் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

5. தண்ணீர்: சருமம் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகவும் தேவையான பானம் தண்ணீர். இது சருமம் மற்றும் குடலிலிருக்கும் நச்சுக்களை அறவே வெளியேற்ற உதவும். சருமம் பளபளப்பு பெறச் செய்யும். ஜீரண உறுப்புகள் எந்தவிதத் தடங்கலுமின்றி ஸ்மூத்தாக இயங்கவும் துணை புரியும்.

மேற்கூறிய 5 வகை பானங்களை அடிக்கடி அருந்தி உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

Jawaharlal Nehru Quotes: குழந்தைகள் பற்றி ஜவஹர்லால் நேரு கூறிய 15 பொன்மொழிகள்!

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT